தயாநிதி அதிமுகவில் சேருவார்-கூறும் ராமராஜன்
வேலூர்: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமான தயாநிதி மாறன் விரைவில் அதிமுகவில் சேருவார். அதற்கான நாள் வெகு தூரத்தில் இல்லை என்று நடிகரும், அதிமுகவில் இருப்பவருமான ராமராஜன் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக அதிமுகவில் இருந்து வருகிறார் நடிகர் ராமராஜன். ஒரு முறை எம்.பியாகவும் இருந்தார். ஆனால் அதன் பின்னர் கட்சியில் அவருக்குப் பெரிய அளவில் செல்வாக்கு இல்லாமல் போய் விட்டது.
இந் நிலையில் வேலூரில் நடந்த அண்ணா நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் ராமராஜன் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தயாநிதி மாறன் விரைவில் அதிமுகவில் சேருவார் என குண்டைத் தூக்கிப் போட்டார். ராமராஜன் பேசுகையில்,
தயாநிதி மாறனுக்கும், அவரின் தாத்தாவுக்கும் இருந்த உறவு என்ன? இப்போது இருக்கும் உறவு என்ன? தயாநிதி மாறன் அதிமுகவில் சேரும் நாள் விரைவில் வரும்.
கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளில் கருணாநிதி தொடங்கிய டி.விக்கு கலைஞர் டி.வி. என்று பெயர் வைத்துக் கொண்டார். ஏன் அண்ணாவின் பெயரை வைக்கவில்லை. குறைந்த பட்சமாக இசையருவி டிவிக்காவது அண்ணா பெயரை வைத்திருக்கலாம்.
மூப்பனாரின் முதுகில் ஏறி ஆட்சியில் அமர்ந்தவர் கருணாநிதி. அப்போது, பிரதமராகும் வாய்ப்பு மூப்பனாருக்கு ஏற்பட்டபோது அதை தடுத்தவரும் கருனாநிதி தான்.
அதேபோல் டாக்டர் ராமதாசின் முதுகில் அமர்ந்து ஆட்சியை பிடித்தவர், தற்போது காங்கிரஸ் தயவு இருந்தால் போதும் என்கிறார் என்றார் ராமராஜன்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications