சிறு- நடுத்தர தொழில்துறைக்கு ரூ.15 கோடி முதலீட்டு மானியம்
சென்னை: தமிழகத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கும் வேளாண் தொழில்களுக்கும் ரூ.15 கோடி முதலீட்டு மானியம் வழங்கப்படவுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும், தொழிலில் பின் தங்கிய பகுதிகளுக்கும், 385 ஒன்றியங்களிலும் வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்குவதற்கும் முதலீட்டு மானியம் வழங்குவதற்காக ரூ.15 கோடியை அனுமதித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதில் கோவை மாவட்டத்திற்கு ரூ.1.7 கோடியும், காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு ரூ.1.25 கோடியும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரூ.1.2 கோடியும், ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.1 கோடியும், வேலூர் மாவட்டத்திற்கு ரூ.95 லட்சமும், சேலம், மதுரை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.70 லட்சமும் உள்பட மொத்தம் ரூ.15 கோடிக்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்க 1.8.2006-க்கு பின் ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுத்து, 22.2.2008 அன்று தொழில் கொள்கை அறிவிக்கப்பட்ட பின்பு வணிக ரீதியாக உற்பத்தியை தொடங்கிய தொழில்களுக்கும், இதன் பின்னர் தொடங்கப்பட்ட தொழில்களுக்கும் மானியம் வழங்க இந்த தொகை பயன்படுத்தப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் தகுதி உள்ள தொழில்முனைவோர்களை கண்டறிந்து, மானியம் வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி தமிழகத்தில் தொழில் முன்னேற்றத்திற்கு உதவிடுமாறு தொழில் முனைவோர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications