பெருமாள் கோயில் இடிப்பு: மறியல்-கல்வீச்சு-பதட்டம்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் பெருமாள் கோயில் இடிக்கப்பட்டதால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் சாலை மறியலிலும், பஸ் மீது கல் வீசியும் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் அருகே உள்ள கொளத்துப்பாளையத்தில், பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளதாக கூறி பொதுப் பணித்துறை அதிகாரிகள் கோயிலை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் கோயிலை இடிக்கக் கூடாது என்றும், அதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி சாலை மறியல் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தாசில்தார் சுலோக்சனா பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் இதில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கிராம மக்கள் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர் அந்த வழியாக வந்த பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 பஸ் கண்ணாடிகள் உடைந்தன. இதை பார்த்த பஸ் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் எடுத்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+