விஜயன் கொலை வழக்கு: பானுவின் ஜாமீன் மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

Bhanumathi
சென்னை: எம்.ஜி.ஆர்.உறவினர் விஜயன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது மைத்துனி பானு என்கிற பானுமதியின் ஜாமீன் மனுவை சென்னை அமர்வு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்டது.

விஜயன் கொலை வழக்கில் கூலிப்படையை ஏற்பாடு செய்து அவரைக் கொன்ற விஜயனின் மனைவி சுதாவின் தங்கை பானு என்கிற பானுமதி, கூலிப்படைத் தலைவனாக செயல்பட்ட போலீஸ்காரர் கருணா என்கிற கருணாகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பானு, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பானுவை விடுவித்தால் விசாரணை பாதிக்கப்படும் என போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பானுவின் ஜாமீன் மனுவை நீதிபதி தேவதாஸ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+