திமுகவோடு போட்டி மதிமுக இணைப்பு எப்போது?
மதுரை: திமுகவில் விரைவில் இணையப்போவதாக போட்டி மதிமுகவை உருவாக்கிய எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் அறிவித்து பல மாதங்கள் ஆகியும் அதற்கான எந்த அறிகுறியும் இதுவரை காணவில்லை.
மதிமுகவில் இருந்து பிரிந்து சென்று போட்டி மதிமுகவை உருவாக்கினர் எல்.கணேசன் மற்றும் செஞ்சி ராமச்சந்திரன். தாங்கள் தான் உண்மையான மதிமுக என தேர்தல் கமிஷனில் முறையிட்டனர். ஆனால் இவர்களை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் கமிஷனில் முறையீடு செய்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த தலைமை தேர்தல் கமிஷன், வைகோ தலைமையிலான மதிமுகவே உண்மையானது என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து தங்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் விரைவில் இணையப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு எல்.கணேசன் தெரிவித்திருந்தார்.
இணைப்பு விழா தேதி விரைவில் குறிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் பல நாட்களாகியும் இது பற்றி எந்த அறிவிப்போ தகவலோ வரவில்லை.
அதிமுகவில் இருந்த செல்வகணபதி கூட நொடிப் பொழுதில் திமுகவில் இணைந்து விட்டார்.
ஆனால் திமுகவில் இணையப் போவதாக அறிவித்த எல்.கணேசன், மற்றும் செஞ்சி ராமசந்திரன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இணைப்பு விழா மட்டும் தள்ளிப்போவது ஏன் என்பது மர்மமாக உள்ளது. இதற்கு அரசியல் காரணங்கள் உள்பட பல காரணங்களால் இணைப்பு விழா தள்ளப்போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications