ஆட்சியில் பங்கு: புதுச்சேரி குறித்தும் பேசுவோமா?-கருணாநிதி
திருச்சி: தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பதோடு புதுச்சேரியிலும் அதுகுறித்து முடிவு செய்வது குறித்து திமுகவும, காங்கிரஸும் பேசலாம் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
திருச்சியில் நேற்று திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் முதல்வர் கருணாநிதிக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. கோலாகலமான கொண்டாட்டத்திற்கு நடுவே, தொண்டர்களின் கரகோஷங்களுக்கு இடையே திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், முதல்வர் கருணாநிதிக்கு பெரியார் விருதினை வழங்கினார்.
முதலில் பெரியார் விருதுக்கான பாராட்டுப் பட்டயத்தை அன்பழகன் வாசித்தார். முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, அவர் அரசியல், இலக்கியம், சமூக வாழ்க்கையில் ஆற்றிய தொண்டு, பணியை விளக்கினார். பின்னர் அவரிடம் விருதினை வழங்கினார்.
மு.க.ஸ்டாலினுக்கு கலைஞர் விருதும், ஆற்காடு வீராசாமிக்கு அண்ணா விருதும், துரைமுருகனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
பின்னர் முதல்வர் கருணாநிதி பேசுகையில், காலையில் தான் திருச்சி வந்தபோது செய்தியாளர்களிடம், திமுக அமைச்சரவையில் காங்கிரஸாருக்குப் பங்கு என்பது குறித்து தான் கூறிய கருத்துக்களுக்கு விளக்கம் அளித்தார்.
அவர் பேசுகையில், இங்கு பேசிய காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஒரு கருத்ைதக் கூறினார். அந்த கருத்து எதிர்காலத்தில், ஏன் நிகழ்காலத்தில் கூட திமுக, காங்கிரஸ் கட்சியிலிருந்து சிலரை ஆட்சியில் இணைத்துக் கொள்ளுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு மேலிடத்து தலைவர்கள் தமிழ்நாட்டு திமுக தலைவர்கள், டெல்லியில் உள்ள தலைவர்கள் மத்தியில் பேசி முடிவெடுக்கலாம் என்று நான் சொன்னதாக கூறினார்.
ஆட்சியில் பங்கு பெறுவது குறித்து மேலிடத் தலைவர்கள் கேட்டால், அதுகுறித்து பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என்று தான் கூறினேன்.
புதுச்சேரி குறித்தும் பேசலாம் ..
இது தமிழ்நாட்டுடன் முடிகிற பிரச்சினை அல்ல. பக்கத்திலே புதுச்சேரி இருக்கிறது. அதுபற்றியும் பேசலாம்.
காலையில் நான் ஜாடையாக விட்டு விட்டேன். இந்த கூட்டத்தில் அவர் பகிரங்கப்படுத்தியிருக்கிற காரணத்தால் விளக்க வேண்டியுள்ளது. இதை வைத்து சில பத்திரிக்கையாளர்கள் விளையாடுவதற்கு விட்டு விடக் கூடாது.
நானும் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் பேசி முடிவெடுக்கக் கூடிய சூழ்நிலை வருமானால் அதற்கு தயாராக இருக்கிறோம். நான் டெல்லி செல்லமுடியவில்லை என்றால், கூட டி.ஆர்.பாலு போன்றவர்களை அனுப்பி பேசுவதானாலும் பேசலாம்.
இந்த பிரச்சினையை விரிவுபடுத்தி விடக் கூடாது. விரிவுபடுத்த வேண்டியது நம்மிடையே உள்ள ஒற்றுமையை, கொள்கையை, மத நல்லிணக்கத்ைத போற்றுகின்ற ஆட்சியைத்தான்.
மத வெறி ஆட்சி வந்து விடக் கூடாது ...
மத வெறி ஆட்சி மீண்டும் வந்து விடக் கூடாது என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சோனியாவும் மத நல்லிணக்கத்திற்கு முக்கியம் தருகிறார்.
தீவிரவாதத்தில் முக்கால் பங்கு மதவெறிக்கு இருக்கிறது. அதை மாய்த்தால்தான் வளராமல் தடுத்தால்தான் இந்தியா அமைதிப் பூங்காவாக திகழும். இல்லையென்றால் மத வெறி எதிர்காலத்தில் நம்மை மாய்த்து விடும்.
முன்பு பாஜக கட்சியுடன் கூட்டணி ஏற்பட்டபோது கூட மதச்சார்பற்ற தன்மைக்கு உறுதி வாங்கிக் கொண்டுதான் அரசு பொறுப்பில் திமுக அங்கம் வகித்தது. அதிலிருந்து பாஜக விலகியதால் நாங்கள் விலகி விட்டு வேறு அணியை உருவாக்கினோம். சோனியாவின் தலைமையை ஏற்றுக் கொண்டோம்.
என்னை ஒரு சகோதரராகவே சோனியா ஏற்றுக் கொண்டுள்ளார். நான் அவரிடம் பேசியபோது அவர், நீங்கள் பேசுவது சோனியா காந்தியிடம் மட்டுமல்ல, இந்திரா காந்தியின் மருமகளிடமும்தான் என்றார். அந்தஅளவுக்கு அவருடன் எங்கள் உறவு நீடிக்கிறது, தொடர்ந்து நீடிக்கும்.
தங்கபாலு மேலிடத்தில் பேசி என்ன முறை கையாளுகிறார்களோ, அதைப் பற்றி பேசலாம். தமிழ்நாடு, புதுச்சேரி என இந்த இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து, இந்த கூட்டணி ஆட்சி பற்றி ஒரு நல்ல முடிவு எடுக்கலாம். எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதற்கு நம்மை உறுதிப்படுத்துவதற்கு இது பயன்படும் என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில்மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், தி.க. தலைவர் கி.வீரமணி, முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன் உள்ளிட்டோரும் பேசினர்.
தேர்தலை சந்திக்க தயார்: கருணாநிதி
ன்னதாக ெசய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், மின் உற்த்தியில் முந்தைய அதிமுக ஆட்சி பெரிய முயற்சிகளை மேற்கொள்ளாததுதான் இப்போதைய மின்வெட்டு பிரச்சனைக்கு காரணம். இப்போது நாங்கள் சமாளிக்க வேண்டியுள்ளது.
தமிழகத்தில் டாடா நானோ தொழிற்சாலை தொடங்க அழைப்பு விடுக்கவில்லை. ஏட்டிக்கு போட்டியாக செயல்பட முடியாது. அவர்களை அழைத்து மேற்கு வங்க அரசுடன் பிரச்சனை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்தித்துள்ளனர். இதுகுறித்து நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
ஒரிஸா, கர்நாடக மாநிலங்களில் சர்ச்கள் தாக்கப்பட்டதில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் வரும் தேர்தலில் அக்கட்சிக்கும் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அது அவருடைய கருத்து.
நாட்டில் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அனைத்து கட்சித் தலைவர்களும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். மத்திய அரசு மோதுமான அக்கறையோடு செயல்பட்டு வருகிறது.
பொடா போன்ற கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டால் அதற்கு ஆதரவு தருவது குறித்து வைகோவிடம்தான் கேட்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும், அதை சந்திக்க ஜனநாயக கட்சியான திமுக எப்போதும் தயாராக உள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில்துறை வேகமாக வளர்ந்திருப்பதை வெளிமாநிலத்தினரும் வெளிநாட்டினரும் பாராட்டி வருகின்றனர். தமிழக அரசின் சாதனைகள் பாமக நிறுவனர் ராமதாஸூக்கு வேதனையாக இருக்கலாம்.
கோவையில் ஐடி பார்க் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட நகரங்களில் ஐடி பார்க் அமைக்கும் பணிகள் படிப்படியாக தொடங்கும். இலவச கலர் டிவி வழங்குவதை போல அரசின் கேபிளும் வழங்குவது என்பது நல்ல யோசனைதான். இது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றார் அவர்












Click it and Unblock the Notifications