சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்களுக்கு ஜாமீன்
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் யோகரத்தினம், ராஜரத்தினம் மற்றும் சண்முகத்துரைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 1ம் தேதி சென்னை தியாகராய நகர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இரு ஊழியர்களைக் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து உரிமையாளர்களான யோகரத்தினம், ராஜரத்தினம், சண்முகத்துரை ஆகியோர் தலைமறைவானார்கள்.
3 பேரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் இதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. பின்னர் உயர்நீதிமன்றத்தை அணுகினர். அங்கும் மனுதள்ளுபடியானது.
இதையடுத்து 3 பேரும் கோர்ட்டில் சரணடைந்தனர்.அதன் பின்னர் 3 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஜாமீன் கோரி 3 பேரும் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து 3 பேரும் உயர்நீதிமன்றத்தை அணுகினர். 3 பேரின் மனுக்களையும் விசாரித்த நீதிபதி ரகுபதி, 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டார்.
அதன்படி 3 பேரும் தலா ரூ. 25 ஆயிரம் ரொக்க ஜாமீன் மற்றும் தலா இரு நபர் ஜாமீன் உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்.
மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக மூன்று உரிமையாளர்களும் தாக்கல் செய்திருந்த மனுவில், சதிச் செயல் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம். இதை மாம்பலம் போலீஸார் விரிவாக விசாரிக்க வேண்டும்.
உயிரிழப்பு ஏற்படும் வகையில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அப்படியே அஜாக்கிரதையான போக்கில் நாங்கள் செயல்பட்டிருந்தாலும் கூட, அதற்கு எங்கள் மீது 304 ஏ பிரிவின் கீழ் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் போலீஸார், 304வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செல்வம், ஜெபசிங் ஆகியோர் ஏற்கனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே எங்களையும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications