தென் ஆப்பிரிக்க அதிபர் டபோ மெபகி ராஜினாமா
கேப்டவுன்: தென் ஆப்பிரிக்க அதிபர் டபோ மெபகி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
வெள்ளையர் ஆதிக்கம் அகன்ற பின்னர் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் தந்தையான நெல்சன் மண்டேலா, அந்த நாட்டின் முதல் கருப்பர் இன அதிபராக பொறுப்பேற்றார். மண்டேலா 1999ம் ஆண்டு அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இதையடுத்து மெபகி அதிபராகப் பொறுப்பேற்றார். அது முதல் அவரே அப்பதவியில் நீடித்து வந்தார்.
மெபகி தென் ஆப்பிரிக்க காங்கிரஸ் கட்சியைச்ேசர்ந்தவர். சமீப காலமாக கட்சிக்குள் பிரச்சினை வெடித்தது. மெபகி மீது பல்வேறு ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டன. நீதித்துறை செயல்பாடுகளிலும் மெபகி தலையிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இதையடுத்து உடனடியாக பதவி விலகுமாறு மெபகிக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டது. இதை ஏற்ற மெபகி தனது பதவியை இன்று ராஜினாமா செய்து விட்டார். இருப்பினும் தன் மீதான அனைத்துப் புகார்களையும் அவர் மறுத்துள்ளார்.
மெபகியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் அவர் விலகியுள்ளார்.
விரைவில் நாடாளுமன்றம் கூடி புதிய அதிபரைத்தேர்வு செய்யும் எனத் தெரிகிறது. நாடாளுமன்ற சபாநாயகரும், கட்சியின் துணைத் தலைவருமான பலேகா மபடே புதிய அதிபராக தேர்வு செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.
மெபகி பதவி விலக முக்கிய காரணமான அவரது தீவிர எதிர்ப்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜேக்கப் ஸூமாவின் பெயரும் அதிபர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications