வடிவேலு மீது தாக்குதல் நடத்தியது வருத்தத்திற்குரியது: சரத்குமார்
சென்னை: விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு, டீசல் தட்டுப்பாடு, விவசாயிகளுக்கு உரத் தட்டப்பாடு என பல நிலையிலும் அவதிப்படும் தமிழக மக்களை கவலை மறந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை மருந்தாக விளங்கும் வடிவேலுவை துன்பத்திற்கு ஆளாக்குவதும், துயரப்படுத்துவதும் வருந்தத்தக்கது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகர் சங்கத் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களால் கூர்ந்து கவனிக்கப்படும் பொறுப்பான நிலையில் உள்ள இரு கலைஞர்கள் மோதிக் கொள்வது கவலைக்குரியது.
விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு, டீசல் தட்டுப்பாடு, விவசாயிகளுக்கு உரத் தட்டப்பாடு என பல நிலையிலும் அவதிப்படும் தமிழக மக்களை கவலை மறந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை மருந்தாக விளங்கும் வடிவேலுவை துன்பத்திற்கு ஆளாக்குவதும், துயரப்படுத்துவதும் வருந்தத்தக்கது. இதனை யார் செய்திருந்தாலும் அது தவறுதான்.
தன்னை பின்பற்றும் ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் அகிம்சை வழியை போதிப்பது ஒரு தலைவனின் கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
உணர்ச்சியை தூண்டும் விதமாக, சுட்டுத் தள்ள வேண்டும் என சூளுரைக்காமல் இருப்பது ஒவ்வொருவரின் சமூகக் கடமை என்பதை உணர்ந்தாக வேண்டும். இதுவே நல்ல அரசியலை விரும்பும் மக்களின் விருப்பமாகும்.
ஒரு சக கலைஞரின் மேடையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டபோதும், மற்றொரு கலைஞனின் வீடு அடித்து நொறுக்கப்பட்ட அவலம் நிகழும்போதும், முதலில் ஓடிச் சென்று சக நடிகர் என்ற முறையில் ஆறுதல் கூறுவதும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க ஒழுக்க நடவடிக்கைகளுக்கு உத்தரவிடுவதும் மட்டுமே நாடு விரும்பும் நல்ல மாற்றத்தின் அறிகுறியாக இருக்க முடியுமே தவிர, ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அரசியல் சாயம் பூசி அனுதாபம் தேட முயற்சிப்பதோ, பிறர் மீது பழியை தூக்கிப் போடுவதோ தீர்வாகி விட முடியாது.
அனைத்தையும் மக்கள் ஆழ்ந்து கவனித்து வருகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம். மக்களை மகிழ்விக்கும் கலைஞர்களின் பரஸ்பர சண்டையை பார்த்து மக்கள் ஒருபோதும் மகிழ மாட்டார்கள் என்பது உண்மை என்று கூறியுள்ளார் சரத்குமார்.
சமீபத்தில் விஜய டி.ராஜேந்தரின் பொதுக்கூட்ட மேடையில் தேமுதிகவினர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர் என்ற சர்ச்சை எழுந்தது. இதைத்தான் சரத்குமார் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். வடிவேலு - விஜயகாந்த் மோதலில் வடிவேலுவுக்கு ஆதரவான நிலையை சரத்குமார் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications