விஜயகாந்த் என்ன மகாத்மாவா?-வடிவேலு

வடிவேலு விவகாரம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த், முதல்வர் கருணாநிதியையும், காவல்துறையையும் கடுமையாக விமர்சித்தார்.
இதுகுறித்து வடிவேலு இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
முதல்வர் என்ன சும்மாவா இருக்கிறார். அவருடைய பணிச்சுமை அனைவருக்கும் தெரியும். என்னைத் தூண்டி விடவா அவருக்கு நேரம் இருக்கிறது.
விஜயகாந்த் ஏதோ மகாத்மாவுக்கு அடுத்து தான்தான் என்பது போல பேசுகிறார். மற்றவர்கள் எல்லாமே கெட்டவர்கள் என்பது போல பேசுகிறார்.
என்னை அடிக்கத் தூண்டியது விஜயகாந்த்தான். அவர் அனுப்பிய ஆட்கள்தான் என்னைக் கொலை செய்ய முயற்சித்தனர். இதுதான் சார் உண்மை. இதில் எந்தப் பொய்யும் இல்லை.
இதில் முதல்வரை ஏன் இழுக்கிறார், அரசியலுக்கும், இதற்கும் என்ன சம்பந்தம். ஏன் இந்தப் பிரச்சினையை அவர் அரசியலாக்கப் பார்க்கிறார்.
நான் கூறிய புகார்களுக்கு இதுவரை அவர் பதிலே சொல்லவில்லை. நான் கோர்ட்டுக்குப் போகக் கூடாது என்று நினைத்து இந்த செயலை செய்தனர். ஆனால் நான் கோர்ட்டுக்குப் போனேன். அவர்கள்தான் யாரும் வராமல் ஓடிப் போய் விட்டார்கள். இப்போது மாஜிஸ்திரேட் வாரண்ட் பிறப்பித்துள்ளார்.
விஜயகாந்த் தனது ரவுடியிசத்தை என்னிடம் காட்டக் கூடாது. நான் அதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்.
எனது வீட்டை தாக்கத் தூண்டியது விஜயகாந்த்தான். அவர் அனுப்பிய ஆட்கள்தான் எனது வீட்டைத் தாக்கினர். இதுதான் உண்மை.
இந்த விஷயத்தில் சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் முதல்வரையும், காவல்துறையினரையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.
நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் சரத்குமார் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயகாந்த் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார். அதேபோல பல நடிகர், நடிகைகளும் என்னைத் தொடர்பு கொண்டு பேசி தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் என்றார் வடிவேலு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications