திமுக அரசை கண்டித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிப்புத்தூர்: சாலை வசதி, அரசு பஸ் போக்குவரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முக்கிய சாலைகள் மிகவும் பழுதடைந்திருப்பது, கிராம பகுதிகளில் அரசு பஸ் இயக்காத திமுக அரசை கண்டித்தும், வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை களைய வலியுறுத்தியும் அதிமுக சார்பில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆர்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சேகர் சிவசாமி தலைமை வகித்தார். இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது:
ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து கோவில்பட்டி வரையிலும் உள்ள சாலையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
பள்ளிகள் இயங்கும் நேரங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பேருந்துகளில் செல்ல வேண்டியுள்ளனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல ஊராட்சி மன்றங்களில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைகள் நடைபெறுகிறது. வேலை செய்வோருக்கு அரசு நிர்ணயம் செய்த கூலியை விட குறைவாக கொடுக்கப்படுகிறது.
இதனால் தற்போது, அனைத்துப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பணிகளில் ஊழல்கள் நடைபெற்றுள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் உள்ள திமுக அரசு மௌனம் காக்கிறது என்றனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications