பொங்கல் முதல் சென்னைக்கு கடல் குடிநீர் விநியோகம்: ஸ்டாலின்

மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி என்ற இடத்தில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டர் கடல் குடிநீர் இந்தத் திட்டம் மூலம் சப்ளை செய்யப்படும்.
திட்டப் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அப்போது திட்டம் எந்த அளவில்உள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜனவரி 15ம் தேதி பொங்கல் தினத்தன்று பொங்கல் பரிசாக சென்னை மக்களுக்கு கடல் குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து மாதவரம் மற்றும் செங்குன்றம் வரை குடிநீரை கொண்டு செல்லும் குழாய்களை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
அதேபோல மாதவரம் மற்றும் மணலி நீரேற்று நிலையங்கள் வரை குழாய் பதிக்கும் பணியில் 23 ஆயிரத்து 350 மீட்டர் நீளத்தில் தற்போது 20 ஆயிரத்து 614 மீட்டர் நீளத்திற்கு ஆயிரம் மில்லி மீட்டர் விட்டமுள்ள குழாய்கள் பதிக்கப்பட்டு விட்டது.
இதுவரை 80 சதவீத பணிகள் முடிந்து விட்டன. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிவடையும். ஜனவரி மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 15ம் தேதி முதல் குடிநீர் வழங்கப்படும் என்றார் ஸ்டாலின்.
ஸ்பெயினைச் சேர்ந்த பெபீசா நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் ஐவிஆர்சிஎல் நிறுவனம் இத்திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.
25 ஆண்டுகளுக்கு கடல் குடிநீரைப் பெறுவது தொடர்பான ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோவாட்டர் நிறுவனம், ஐவிஆர்.சிஎல் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது. ஒரு கிலோ லிட்டர் நீரின் விலை ரூ. 48.66 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜவஹர் லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 93 கோடி செலவில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications