முகேஷ் மீது அனில் 10000 கோடி கேட்டு வழக்கு?
தன் அண்ணன் முகேஷ் அம்பானி மீது ரூ.10000 கோடி நஷ்ட ஈடு கேட்டு தம்பி அனில் அம்பானி வழக்கு தொடர்ந்துள்ளார் என பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் அப்படியெதுவும் கிடையாது என முகேஷ் அம்பானி தரப்பு மறுத்துள்ளது.
சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அனில் அம்பானியை விமர்சிப்பது போல சில கருத்துக்களைச் சொல்லியிருந்தாராம் முகேஷ் அம்பானி.
இந்தக் கருத்துக்கள் தன்னைப் புண்படுத்துவதாகவும், தனக்கும் தன் அனில் திருபாய் அம்பானி குரூப் நிறுவனத்துக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாகவும் கூறி இந்த மான நஷ்ட வழக்கைத் அனில் தொடர்ந்துள்ளதாகப் பேசப்பட்டது.
மும்பை உயர்நீதி மன்றத்தில் கடந்த மாதமே இந்த வழக்கு தொடரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்று இதுகுறித்து கேட்டபோது முதலில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் முகேஷ் அம்பானியின் செய்தித் தொடர்பாளர்.
ஆனால் புதன் கிழமை மாலை இதுகுறித்து வெளியிடப்பட்ட ஒரு செய்திக் குறிப்பில், இப்படியொரு வழக்கே பதிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார் முகேஷின் ரிலையன்ஸ் நிறுவன அதிகாரி ஒருவர்.
ரூ.10,000 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர வேண்டுமானால் அதற்கு கோர்ட் கட்டணமாக ரூ.100 கோடி செலுத்த வேண்டும். இதன் காரணமாகவே வழக்குத் தொடராமல் விட்டுவிடார் அனில் என்றும் கூறுகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications