இன்றும் வங்கிகள் ஸ்டிரைக் நீடிப்பு: மக்கள் பெரும் அவதி
டெல்லி: 2வது நாளாக இன்றும் நாடு முழுவதும் வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மக்கள் பணம் எடுக்க முடியாமல், போட முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளை தனியாரிடம் விடக் கூடாது, அன்னிய முதலீடுகளை அதிகரிக்கக் கூடாது என்பவை உள்ளிட்ட கோரிக்ககளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கிகள், தனியார்துறை வங்கிகள் உள்ளிட்டவை 2 நாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
நேற்று தொடங்கிய இந்த ஸ்டிரைக் இன்றும் நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நாடு முழுவதும் அனைத்து அரசு வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ள 26 தனியார் வங்கிகளின் கிளைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த வங்கிகளின் ஏடிஎம் மையங்களும் செயல்படவில்லை.
இதனால் நேற்று முதல் பணப் பரிவர்த்தனை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. பணம் எடுக்க முடியாமலும், போட முடியாமலும் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நாடு முழுவதும் மொத்தம் 9 லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளனர். பல மாநிலங்களில் தர்ணா உள்ளிட்ட போராட்டங்களிலும் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications