ஆயுதங்களை கீழே போடும் வரை புலிகளுடன் பேச்சு கிடையாது: ராஜபக்சே

ஐ.நா. 63வது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்துள்ள ராஜபக்சே அங்கு உரை நிகழ்த்துகையில், விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோதமான ஆயுதம் தரித்த தீவிரவாத குழுவாகும். அது தனது வன்முறையைக் கைவிட வேண்டும். ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். எனவே அவர்களுடன் பேச்சு நடத்த முடியாது.
பலமுறை அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. இலங்கையின் சிறுபான்மை தமிழ் சமுதாயத்திற்குத் தேவையானவற்றை அரசியல் ரீதியாகவும், அரசியல் சட்ட ரீதியாகவும் நிறைவேற்ற அரசு உறுதியுடன் உள்ளது.
ஆனால் ஆயுதம் தாங்கிய தீவிரவாத குழுவான விடுதலைப் புலிகளுடன் அரசு எந்தவித தொடர்பையும் வைத்துக் கொள்ள முடியாது. அவர்கள் ஒரு சமுதாயத்தின் பிரதிநிதிகள் அல்ல, அந்த சமுதாயத்தின் ஒரு துண்டுதான் அவர்கள்.
இலங்கையின் வட பகுதியில் அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சொந்த இனத்தவரின் ஜனநாயக உரிமைகளை நசுக்கி வருகிறார்கள். சுதந்திரமான முறையில் தேர்தல் நடத்த தடையாக இருக்கிறார்கள்.
சிங்கள மக்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே நட்புறவு நிலவுவதை அவர்கள் விரும்பவில்லை. பேச்சுவார்த்தைளை கேலிக்கூத்தாக்க நினைக்கிறார்கள்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வு காண நார்வே தூதுக் குழு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச குழுக்களின் உதவியுடன் இலங்கையில் இதுவரை இருந்த அரசுகள் முயற்சித்தும் அவற்றை விடுதலைப் புலிகள் மதிக்காமல் அவமதித்து விட்டனர்.
பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு முறையும் அவர்கள் அதை சரிவர பயன்படுத்திக் கொள்ளாமல், ஆயுதங்களைக் குவிப்பதற்கும், தீவிரவாதத்தை பலப்படுத்திக் கொள்ளவுமே பயன்படுத்தி வந்துள்ளனர் என்றார் ராஜபக்சே.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications