தேர்தல் வன்முறை: சிபிஎம் நூதன போராட்டம்
மதுரை: மதுரை மாநகராட்சி 52-வது வார்டு இடைத் தேர்தலில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் கறுப்பு பட்டை அணிந்து நூதன போராட்டம் நடத்தினர்.
மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.
அப்போது, மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கறுப்பு பட்டை அணிந்து வந்திருப்பதைக் கண்ட மேயர் தேன்மொழி, எதற்காக கறுப்புபட்டை அணிந்து வந்துள்ளீர்கள் என கேட்டார்.
அதற்கு சிபிஎம் கவுன்சிலர்கள், மதுரை மாநகராட்சி 52 -வது வார்டு இடைத் தேர்தலில் நடை பெற்ற வன்முறையை கண்டித்தும், மன்றத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், தண்ணீர் வினியோகத்தை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்தும் கறுப்பு பட்டை அணிந்து வந்திருப்பதாக கூறினார்.
இதனால் திமுக கவுன்சிலர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன்றத்தில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது.
அப்போது மார்க்சிஸ்ட் கவுன்சிலர்களை கறுப்பு பட்டையை கழற்ற மேயர் உத்தரவிட்டார். அதை அவர்கள் மறுத்து வெளிநடப்பு செய்தனர்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications