'காதலில் விழுந்தேன்': முதல்வர் தலையிட இயக்குனர் கோரிக்கை
சென்னை: காதலில் விழுந்தேன் படத்தை மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் திரையிடுவதில் அழகிரியால் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் முதல்வர் கருணாநிதி தலையிட்டு தீர்வுக்கு வழி வகுக்க வேண்டும் என அப்படத்தின் இயக்குனர் பி.வி.பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
சன் டிவியின் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள படம் காதலில் விழுந்தேன். இப்படத்தில் இடம் பெற்ற நாக்க மூக்க பாடல் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் படம் குறித்து நீண்ட நாட்களாகவே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந் நிலையில் நேற்று காதலில் விழுந்தேன் உலகெங்கும் ரிலீஸானது. ஆனால் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் இப்படம் திரையிடப்படவில்லை. மதுரையில் 9 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெளியாகவில்லை.
மு.க.அழகிரி பெயரைச் சொல்லி சிலர் மிரட்டுவதாகவும், படத்தைத் திரையிடக் கூடாது என தடுப்பதாகவும் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் படத்தின் இயக்குனர் பி.வி.பிரசாத் சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகம் மட்டுமல்லாது அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா என பல உலக நாடுகளிலும் காதலில் விழுந்தேன் ரிலீஸாகி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
ஆனால் மதுரை மற்றும் சுற்று வட்டாரத்தில் மட்டும் இப்படம் திரையிடப்பட முடியவில்லை. கேட்டால் அழகிரி சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார், மிரட்டுகிறார்கள் என திரையரங்க உரிமையாளர்கள் புகார் கூறுகிறார்கள்.
எங்களது கோரிக்கை என்னவென்றால் முதல்வர் கருணாநிதி இந்த விவகாரத்தில் தலையிட்டு சுமூக தீர்வுக்கு வழி வகுக்க வேண்டும். பெரும் எதிர்பார்ப்புடன் உள்ள மதுரை மற்றும் சுற்று வட்டார ரசிகர்களும் இப்படத்தை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
படத்தை தடுக்கவில்லை-அரசு:
இந் நிலையில் காதலில் விழுந்தேன் படத்தை மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் திரையிடலாம். இதுதொடர்பாக எந்தவித கட்டுப்பாடும், தடையும் விதிக்கப்படவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள காதலில் விழுந்தேன் படத்திற்கு அரசு எந்தவித கட்டுப்பாட்டையும், தடையையும் விதிக்கவில்லை.
சென்சார் போர்டு அனுமதி அளித்த எந்தப் படத்தையும் மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் திரையிட விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் சுதந்திரம் உண்டு.
இதுபோன்ற செய்திகளை அரசு திட்டவட்டமாக மறுக்கிறது. காதலில் விழுந்தேன் படத்துக்கு எந்தத் தடையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications