இன்று முதல் திருச்செந்தூர்-நெல்லை ரயில்
நெல்லை: திருச்செந்தூர்-நெல்லை இடையிலான அகல ரயில் பாதையில் இன்று போக்குவரத்து தொடங்குகிறது. மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு தொடங்கி வைக்கிறார்.
கடந்த 2006ம் ஆண்டு நெல்லை-திருச்செந்தூர் இடையே இயக்கப்பட்ட மீட்டர் கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதன் பிறகு ரூ.70 கோடியில் அகல பாதை பணிகள் ஒன்றரை வருடங்களாக நடந்தன.
இந்த பணிகள் முடிந்து கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி 120 கிமீ வேகத்தில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சிஜேஎஸ் நாயுடு தலைமையில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதையடுத்து 70 கிமீ வேகத்தில் ரயில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ரயில் சேவை இன்று துவங்குகிறது. திருச்செந்தூரில் நடைபெரும் துவக்க விழாவில் ரயில்வே இணை அமைச்சர் வேலு கொடியசைத்து பயணிகள் ரயிலை துவக்கி வைக்கிறார்.
மத்திய அமைச்சர் ராதிகா செல்வி தலைமை வகிக்கிறார். அமைச்சர் டிபிஎம் மைதீன்கான், எம்பி தனஷ்கோடி ஆதித்தன், எம்எல்ஏக்கள் அனிதா, ஆர்.ராதாகிருஷ்ணன், மாலை ராஜா, ராணி வெங்கடேஷன், திருச்செந்தூர் பேரூராட்சி தலைவர் மகேந்திரன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications