அணு ஒப்பந்தம்: 'கோரம்' இல்லாததால் வாக்கெடுப்பு நடக்கவில்லை!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய - அமெரிக்க சிவில் அணு சக்தி ஒப்பந்தம் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
முதலில் ஒப்பந்தம் குறித்து செனட் சபையில் விவாதம் நடந்தது. இதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது பிரதிநிதிகள் சபையில் ஒப்பந்தம் விவாதத்திற்கு வந்துள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை பிரதிநிதிகள் சபையில் விவாதம் தொடங்கியது.
இரு தரப்புக்கும் (ஆதரிப்போர், எதிர்ப்போர் - கட்சி பாகுபாடின்றி) தலா 20 நிமிடங்கள் வாதம் செய்ய அனுமதி தரப்பட்டது.
ஆதரிப்போர் தரப்பில் பேசிய ஜோ வில்சன், அமெரிக்க- இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதனால் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் பெருகும்.
அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதில்லை என்று இந்தியாவே முன்வந்து உறுதியளித்துள்ளது. மேலும், சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் கண்காணிப்பும் இருக்கும் என்பதால் அச்சப்படத் தேவையில்லை.
இந்த ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இதை நாம் நிறைவேற்ற ஒப்புதல் தர வேண்டும் என்றார்.
எதிர்ப்பாளர்கள் தரப்பில் வாதிட்டோர், இந்தியாவுக்கு ஒப்புதல் அளித்தால் நாளை பாகிஸ்தானும் இதேபோன்ற ஒப்பந்தத்தை கோரும். பாகிஸ்தானும் நமது நட்பு நாடுதான். அப்போது நம்மால் மறுக்க முடியாது.
மேலும் இந்த ஒப்பந்தத்தால் தெற்காசியாவில் அணு ஆயுதப் போட்டி ஏற்பட வழி ஏற்படும் என்றனர்.
விவாதத்தின்போது உறுப்பினர்களில் 3ல் 2 பங்கு பேர் வரவில்லை. இதனால் வாக்கெடுப்புக்கு உரிய கோரம் இல்லை. இதன் காரணமாக இன்று வாக்கெடுப்பு நடைபெறவில்லை. நாளை வாக்கெடுப்பு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்?












Click it and Unblock the Notifications