பஞ்சாபுக்கு தீவிரவாதிகள் குறி: உளவுத்துறை எச்சரிக்கை

தலைநகர் டெல்லியில் இருமுறை குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. பெங்களூர், அகமதாபாத் ஆகிய நகரங்கள் ஒருமுறை அதிர்ந்துள்ளன. அடுத்து எந்த நகரம் என்ற பரபரப்பில் ஒட்டுமொத்த இந்தியாவும் பதட்டத்துடன் உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பஞ்சாபுக்கு தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மத்திய உளவுத்துறை, மாநில அரசை எச்சரித்துள்ளது. உள்ளூரில் உள்ள தீவிரவாத அமைப்புகளான பாபர் கல்சா, காலிஸ்தான் கமாண்டோ படை என்கிற இரு அமைப்புகளுடனும், லஷ்கர் அமைப்பு தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த இரு அமைப்புகளின் மூலம் பஞ்சாபின் முக்கிய இடங்கள், கோவில்கள் உள்ளிட்ட இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
5 குண்டுகள் சிக்கின:
இதை நிரூபிக்கும் வகையில், மொஹாலி அருகே வயலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இவை அனைத்தும் சாதாரண வகை நாட்டு வெடிகுண்டுகள். குறைந்த சக்தி கொண்டவை.
இவற்றை போலீஸார் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் தீவிர வேட்டை நடந்து வருகிறது.
உளவுத்துறை எச்சரிக்கை, வெடிகுண்டுகள் சிக்கியது ஆகியவற்றைத் தொடர்ந்து பஞ்சாப் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்ைககள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications