அணு ஒப்பந்தம்: செனட்டில் இன்று வாக்கெடுப்பு?
Subscribe to Oneindia Tamil

அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான பிரதிநிதிகள் சபையில் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. செனட் சபையில் அனுமதி கிடைக்க வேண்டியது மட்டுமே பாக்கி.
ஏற்கனவே விவாதித்து விட்ட செனட் சபையில் வாக்கெடுப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டு விட்டது. இந்த நிைலயில் இன்று செனட்டில் வாக்கெடுப்பு நடைபெறக் கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இதுகுறித்து செனட் பெரும்பான்மைக் கட்சியின் தலைவரான ஹாரி ரீட் கூறுகையில், திங்கள்கிழமை பாதுகாப்பு அங்கீகார சட்ட மசோதா, இந்திய -அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்டவற்றின் மீது வாக்கெடுப்பு நடைபெறக் கூடும்.
இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் அதைக் கைவிட வேண்டும் என்றார்.
அனேகமாக இன்றைக்கு செனட்டில் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு விடப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications