இலங்கை சிங்களர்களுக்கே-ராணுவ தளபதி உறுமல்

Subscribe to Oneindia Tamil

Fonseka
கொழும்பு: இலங்கை சிங்களர்களின் நாடு. இங்கு சிறுபான்மையினர் தாராளமாக வசிக்கலாம். ஆனால் எந்த உரிமையையும் அவர்கள் கோர முடியாது என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா. அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

கனடா நாட்டின் நேஷனல் போஸ்ட் என்ற இதழுக்கு பொன்சேகா இந்த சர்ச்சை பேட்டியை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த நாடு சிங்களர்களின் நாடு என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்ைக உள்ளது. இது சிங்களர்களுக்கான நாடு. இருப்பினும் இங்கு பல சிறுபான்மையினர் வசிக்கின்றனர். அவர்களையும் எங்களது மக்களைப் போலவே நாங்கள் மதிக்கிறோம்.

இங்கு 75 சதவீதம் பேர் சிங்களர்களே. அதை நாங்கள் ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். எங்களது நாட்டைக் காக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது. நாங்கள் வலிமையானவர்கள்.

சிறுபான்மை சமூகத்தினர் இங்கு தாராளமாக எங்களுடன் வசிக்கலாம். ஆனால் எந்த உரிமையையும் அவர்கள் கோர கூடாது, முடியாது. சிறுபான்மையினர் என்ற போர்வையில் எந்த சலுகையையும் அவர்கள் கோர முயற்சிக்கக் கூடாது என்று அவர் பேசியுள்ளார்.

பொன்சேகாவின் இந்தப் பேச்சுக்கு மாற்று கொள்கைகளுக்கான மையம் என்ற அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பொன்சேகா அரசியல் சட்டப்படி தனக்கு தரப்பட்ட உரிமையை தாண்டி விட்டார். வரம்பு மீறி பேசியுள்ளார் என்று அது விமர்சித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொன்சேகா இது போல பேசுவது முதல் முறையல்ல. தனது எல்லையை மீறி அவர் பேசி வருகிறார். அவரது பேச்சு மிகவும் ஆபத்தானது.

ராணுவ சீருடையில் உள்ள அவர் அரசியல் பேசுவதை இலங்கை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

தமிழர்களும், பிற சிறுபான்மையினரும் சிங்களர்களுக்கு அடிமை என்பதைப் போல அவர் பேசியுள்ளார். சிங்களர்களிடம் அவர்கள் மரியாதையையும், கெளரவத்தையும் எதிர்பார்க்கக் கூடாது என்பதைப் போல பேசியுள்ளார்.

சமத்துவம் என்ற கொள்கைக்கு முரண்பாடாக அவரது பேச்சு உள்ளது. ஒரு ராணுவ தளபதியை இந்த அளவுக்கு பேச விடுவது அரசுக்கு நல்லதல்ல. ஜனநாயக அரசின் வரம்பு மீறிய செயலாகும் இது என்று கடுமையாக சாடியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+