சிபிஐ உண்ணாவிரதத்திற்குப் போட்டியாக திமுக திடீர் பொதுக் கூட்டம்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் தலைமையில் அனைத்து கட்சிகளும் திரண்டு நாளை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்தவுள்ள நிலையில், அக்கட்சிகளால் அழைக்கப்படாத திமுக 6ம் தேதி மாலை பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் முதல்வர் கருணாநிதி பேசுகிறார்.
தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தி வரும் அராஜகத் தாக்குதல்களைக் கண்டித்தும், இலங்கை அரசின் போக்கைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் நாளை மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அத்தோடு பங்கேற்கவும் உள்ளன.
ஆளுங்கட்சியான திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் மட்டும் இதில் பங்கேற்கவில்லை. அவற்றை இந்திய கம்யூனிஸ்ட் போராட்டத்திற்கு அழைக்கவும் இல்ைல.
இதனால் திமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இந்த நிலையில், முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் 6ம் தேதி மாலை 6 மணிக்கு மயிலை, மாங்கொல்லையில் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சினை - திமுக நிலையும், மத்திய அரசுக்கு வேண்டுகோளும் என்று இந்தப் பொதுக்கூட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். முதல்வர் கருணாநிதி பேசவுள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications