ஈழ தமிழர்கள்-கருணாநிதிக்கு ராமதாஸ் எச்சரிக்கை
சென்னை: இலங்கையி்ல் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் கூட கண்டித்துள்ளார். ஆனால் கருணாநிதி கண்டிக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொலை செய்யப்படுவதை கண்டித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தின் முன்பு பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ராமதாஸ் பேசியதாவது:
இலங்கையில் ராஜபக்சே அரசு தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. இதனை கண்டித்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் கருணாநிதி குரல் கொடுக்க முன் வர வேண்டும். இந்த விஷயத்தில் கருணாநிதி தனது மௌனத்தை கலைக்க வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தாய் தமிழகத்தில் பலர் போராடுவது அவர்களுக்கு ஆறுதலைத் தரலாம். ஆனால் தனி தமிழ் ஈழத்தை அங்கீகரிப்பதே இன்றைய தேவை.
தமிழ் ஈழம் மலர மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் கருணாநிதி தீர்மானம் கொண்டு வர வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் உங்கள் ஆட்சிதான் நடக்கிறது. அதனால் 356வது பிரிவின் கீழ் ஆட்சி பறிபோகும் என்ற அச்சம் உங்களுக்கு வேண்டாம். அப்படியே ஈழத் தமிழர் பிரச்சனைக்காக ஆட்சியை இழந்தாலும், நாங்கள் மீண்டும் கருணாநிதியை முதல்வராக்குவோம்.
ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி இப்போதே குரல் கொடுக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழர்களும் அழிந்த பிறகு கவிதை எழுதி எந்த பலனும் இல்லை. திமுக அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை.திமுகவை தவிர வேறு ஆட்சியாக இருந்தால் இதைவிட தீவிரமாக போராடி இருப்போம். ஈழத் தமிழர்களுக்கு கருணாநிதியின் வாய்ச்சொல்தான் அருமருந்து.
எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்:
ஈழத் தமிழர் பிரச்சனையில் 10 நாட்களுக்குள் கருணாநிதி தனது மௌனத்தை கலைக்காவிட்டால் தீவுத்திடலில் ஆயிரம் கருஞ்சட்டை தொண்டர்களை திரட்டி தீப்பந்தம் ஏந்தி போராடுவோம்.
அப்போதும் அவரது மௌனம் கலையாவிட்டால், பாமக எம்எல்ஏக்கள் சட்டசபை வளாகத்தில் ஒரு மூலையில் தொடர் உண்ணாவிரதம் இருக்க தயங்க மாட்டார்கள். அவர்களை கைது செய்தால், எம்பிக்கள், பாமக இளைஞரணி, மாணவர் அணி, மகளிர் அணியினர் தொடர் உண்ணாவிரதம் இருப்பார்கள்.
காங்கிரஸ், பாஜக, திமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்பிக்களின் குழுவை வவுனியாவுக்கு முதல்வர் கருணாநிதி அனுப்ப வேண்டும். ஈழத் தமிழர்களை கொலை செய்ய இலங்கை அரசுக்கு பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகள் கப்பல்களில் ஆயுதங்களை அனுப்பி உதவி வருகின்றன.
இலங்கையில் உள்ள துறைமுகங்களை நவீனப்படுத்த சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உதவி செய்து வருகின்றன. இதனால் தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இலங்கையி்ல் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஐநா சபையின் செயலாளர் கூட கண்டித்துள்ளார். ஆனால் கருணாநிதி கண்டிக்கவில்லை என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications