திருட்டு வாகனம்-போலி ஆவணம்-சிறை வார்டன் டிஸ்மிஸ்

Subscribe to Oneindia Tamil

சேலம்: திருட்டு வாகனங்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து வழங்கிய வழக்கில் கைதான சேலம் சிறை வார்டன் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் கியூ பிரிவு போலீஸார் சேந்தமங்கலத்தில் கடந்த 25ம் தேதி வாகன சாதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை சோதனை செய்தனர். அந்த காருக்கு உரிய ஆவணம் இல்லை என்பது தெரியவந்தது.

கார் டிரைவர் ராமேஷிடம் நடத்திய விசாரணையில், அவர் விடுதலை புலிகளுக்கு பால்ரஸ் குண்டு வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்தவர் என்பது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் சேலம் சிறை வார்டன் விஜயகுமாரை போலீஸார் கைது செய்தனர்.

விஜயகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் திருட்டு வாகனங்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனால் அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் சேலம் வந்த சிறைத்துறை டிஜிபி நட்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது

விஜயகுமார் நடவடிக்கைகள் சரியில்லை என்று அவர் திருச்சியில் பணிபுரிந்தபோது புகார்கள் வந்தன. இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+