Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரிபுரா குண்டுவெடிப்புக்கு பிரதமர் கண்டனம் - ஹூஜி காரணம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திரிபுரா முதல்வர் மானிக் சர்க்காருடனும் அவர் தொலைபேசியில் பேசினார்.

அகர்தலாவில் நேற்று மாலை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. ஐந்து இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உடல் சிதறி பலியானார்கள். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முதல் குண்டு அகர்தலாவின் புகழ்பெற்ற கோல் பஜார் மார்க்கெட் பகுதியில் நடந்தது. அதைத் தொடர்ந்து இரு குண்டுகள் அருகே உள்ள ஜிபி மார்க்கெட் மற்றும் பஸ் நிலையத்தில் வெடித்தன.

நிலைமையின் தீவிரம் உணர்ந்த பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். அடுத்த 45 நிமிட நேரத்துக்குள் மேலும் இரு குண்டுகள் வெடித்தன.

இந்த ஐந்து குண்டுவெடிப்புகளில் இரண்டு கடுமையானவை என்று கூறப்படுகிறது. படுகாயமடைந்த அனைவரும் ஜிபி பந்த் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

குண்டு வெடிப்பு நடந்த சில நிமிடங்களுக்குள் அகர்த்தலா முழுக்க பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் கண்டனம்:

குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தவுடன் மானிக் சர்க்காரை தொலைேபசியில் தொடர்பு கொண்டார் பிரதமர். அவரிடம் நடந்த சம்பவம் குறித்து மானிக் சர்க்கார் விளக்கினார்.

அப்போது அப்பாவி மக்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்த சம்பவம் குறித்து பிரதமர் கண்டனம் ெதரிவித்தார். உயிரிழப்பு குறித்து வருத்தமும் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

திரிபுராவில் நடந்த முதல் தாக்குதல்

திரிபுராவில் நடந்துள்ள முதல் தீவிரவாதத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. திரிபுராவில் இயங்கி வந்த நக்சலைட் குழுக்கள் ஆயுதப் போராட்டத்தை விட்டு விட்டடன. இதனால் கடந்த சில ஆண்டுகளாக திரிபுராவில் அமைதி நிலவி வந்தது.

ஆனால் ஹர்கத் உல் ஜிஹாதி (ஹூஜி) அமைப்பு சமீப காலமாக திரிபுராவில் ஊடுறுவ முயன்று வந்தது. இவர்கள்தான் உள்ளூரைச் ேசர்ந்த நக்சலைட் குழுக்களுடன் இணைந்து இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அகர்தலா மோட்டார்ஸ்டேண்ட் பகுதியில்,வெடிக்காத நிலையில் இருந்த ஒரு வெடிகுண்டை போலீஸார் மீட்டுள்ளனர். அதே பகுதியில் இன்னொரு குண்டுவெடித்தது. ஆனால் அதனால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+