ஆந்திரா முழுவதும் சிரஞ்சீவி கட்சியின் கொடியேற்றம் தொடக்கம்

சிரஞ்சீவி ஆகஸ்ட் மாதம் தனது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை பிரம்மாண்டமாக தொடங்கினார். கட்சி கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கையை தனது கட்சி அலுவலகத்தில் சிரஞ்சீவி தொடங்கி வைத்தார். கட்சி கொடியை ஏற்றி வைத்த சிரஞ்சீவி, முதல் உறுப்பினர் அட்டையை ஊனமுற்ற வாலிபர் பாலகிருஷ்ணா என்பவருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
மாநிலம் முழுவதும் அவரது ஆதரவாளர்களும், நிர்வாகிகளும் கட்சி கொடியை ஏற்றினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி கட்சியின் நிர்வாகிகள், நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் சிரஞ்சீவி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சி சமூக நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சிரஞ்சீவி கூறினார்.
முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ரத்ததான முகாமையும் தொடங்கி வைத்தார். பின்னர் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள கங்கப்பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தனது முதல் அரசியல் பயணமாக தனது 8 நாள் பயணத்தை வரும் விஜயதசமியான 9ம் தேதி தொடங்குகிறார். ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சபுரத்தில் சாலை நிகழ்ச்சி நடத்துகிறார். முன்னதாக அரசவல்லியில் உள்ள சூரிய கோயிலில் வழிபாடு நடத்துகிறார்.
பயணத்தின்போது மக்களின் குறைகளை கேட்டறிவார் என்றும் தேர்தல் அறிக்கை தயாரிக்க கருத்து கேட்பார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications