கோவில் விவகாரம்: காக்கிவாடன்பாட்டியில் தொடரும் உண்ணாவிரதம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காக்கிவாடன் பட்டியில், கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக 6 சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இன்று 3வது நாளாக தொடரந்து உண்ணாவிரத்தை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகில் உள்ளது காக்கிவாடன்பட்டி. இங்கு காளியம்மன் மற்றும் கண்ணன் கோவில்கள் உள்ளன.
இந்த கோயில்களில் வழிபாடு நடத்துவது தொடர்பாக 6 சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கும், ஒரு சமூகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கோயிலின் உரிமை குறித்த பிரச்சனையால் கோயில் பூட்டப்பட்டது.
இந்த கோயில்களில் வழிபாடு நடத்த உரிமை கோரி 6 சமுதாய மக்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு அருகே உள்ள காமாட்சியம்மன் கோவிலில் கடந்த 25ம் தேதி முதல் குடியேறி அங்கேயே தங்கி உள்ளனர்.
இரு தரப்பு மக்களிடம் சமாதான பேச்சுவார்தையை அரசு அதிகாரிகள் நடத்தினர். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில், பூட்டிய கோயிலை திறந்த தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்த காத்திருந்தார். ஆனால் மக்கள் யாரும் வராதாதல் திரும்பிவிட்டார்.
இந்த பிரச்சனையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் இரு தரப்பையும் அழைத்துப் பேச வேண்டும் என்று போராட்டகாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்கப்படாததால் 6 சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் இன்று மூன்றாவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications