மெரீனா கடற்கரையில் குளித்த 4 பேர் நீரில் மூழ்கி பலி
சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் குளித்த 4 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி பலியாயினர். அவர்களின் உடல்களை ஹெலிகாப்டர் மூலம் தேடி வருகின்றனர்.
கடலூரைச் சேர்ந்த சகோதரர்கள் பிரபாகரன் (23), பிரேம் குமார் (16), ஹூண்டாய் கம்பெனியில் பணியாற்றினர். இவரது நண்பர்கள் துரைபாக்கம் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர் (26), சந்தோஷ்குமார் (22), வினோத்குமார் (21), விக்னேஷ்வரன் (20).
நேற்று விடுமுறை என்பதால் இவர்கள் அனைவரும் மெரீனா கடற்கரைக்கு சென்றனர். விக்னேஷ்வரனை தவிர மற்ற 5 பேரும் கடலில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த பெரிய அலையில் அவர்கள் சிக்கினர். இதை பார்த்த கடற்கரையில் இருந்தவர்கள் அவரை மீட்கு முயன்றனர். இதில் வினோத் குமார், பிரேம்குமாரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.
ராஜசேகர், சந்தோஷ் குமார், பிரபாகரன் ஆகியோர் நீரில் மூழ்கி பலியாயினர் அவர்களின் உடல் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீஸில் புகார் செய்தார் வினோத்குமார்.
அதேபோல வடபழனியைச் சேர்ந்த சதீஷ் குமார் (18) தனது நண்பர்கள் 9 பேருடன் மெரீனாவில் குளித்துக் கொண்டிருந்தபோது அலையில் சிக்கி பலியானார்.
போலீஸார் மீனவர்களின் உதவியுடன் 4 பேரின் உடல்களை கடலில் தேடினர். இதுவரை உடல்கள் கிடைக்காததால், கடற்படை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடந்து வருகிறது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications