இலங்கை: மத்திய அரசை கருணாநிதி வலியுறுத்த நல்லகண்ணு கோரிக்கை
மதுரை: ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இந்த தீர்மானத்தை நிறைவேற்ற மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் நல்லகண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் நடந்த சிபிஜ உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்த நல்லகண்ணு நிகழ்ச்சியில் பேசுகையில், இலங்கையில் பல ஆண்டுகளாக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட இலங்கை அரசு அடையாள அட்டை வழங்கும்போது 13,000 தமிழர்களை சந்தேகத்திற்குரியவர்களாக அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்துக்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை.
இலங்கை அரசு தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியான உதவிகளை செய்யக் கூடாது. ஆனால், இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இன்னும் அந்த தீர்மானத்தை செயல்படுத்தவில்லை. மத்திய அரசில் இடம் பெற்றுள்ள திமுக, இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு ஆயுதங்கள் மூலம் தீர்வு காணமுடியாது. அரசியல் ரீதியான பேச்சு வார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்றார்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications