வழக்கறிஞர் மீது தாக்குதல் - ரூ.1 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவு
மதுரை: வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை தாசில்தார் நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் முகைதீன் அப்துல் காதர். மீனாட்சி பஜாரில் கடை வைத்துள்ள ராஜாமணிக்கும், அப்துல் சமது என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. இதனால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. இதில் அப்துல் சமதுவின் வழக்கை முகைதீன் அப்துல் காதர் பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ராஜாமணி, முகைதீனை தாக்கியுள்ளார். இதுகுறித்து அப்துல் சமதுவும், வழக்கறிஞர் முகைதீனும் திலகர்திடல் போலீஸில் புகார் செய்தனர்.
அப்போது காவல் நிலையத்தில் வைத்தே அவர்களை திமுகவை சேர்ந்த சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கறிஞர் முகைதீன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், எங்களை காவல் நிலையத்தில் வைத்தே திமுகவை சேர்ந்த சிலர் தாக்கினர். இதை போலீசார் வேடிக்கை பார்த்தனர். மேலும் மனுவை வாங்கவும் மறுத்து விட்டனர்.
எனவே இது குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், தனக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு, வழக்கறிஞர் முகைதீன் அப்துல் காதருக்கு அரசு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications