நளினி விடுதலைக்காக புதிய இயக்கம் - வக்கீல்கள்
வேலூர்: நளினியின் விடுதலைக்காக, நல்லகண்ணு, தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் அடங்கிய ஆயுள் தண்டனை பெற்றோருக்கான மறு வாழ்வு இயக்கம் என்ற புதிய இயக்கத்தை தொடங்கவிருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை விடுதலை செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும் இதுகுறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசை அது கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் நளினியை அவரது வக்கீல்கள், எஸ். துரைசாமி, டி. இளங்கோ ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார்கள். ஒரு மணி நேரம் நடந்த சந்திப்புக்கு பின்னர் அவர்கள் சிறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது, தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நகலை நளினியிடம் காட்டி அதன் விவரங்களை எடுத்து கூறினோம்.
நளினியின் விடுதலைக்காக "ஆயுள் தண்டனை பெற்றோருக்கான மறுவாழ்வு இயக்கம்' ஒன்றை துவங்க திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு அவருடைய அனுமதியை கேட்டோம். அவரும் அனுமதி கொடுத்திருக்கிறார்.
இந்த இயக்கம் இன்று முதல் செயல்படத் துவங்கும். மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஆர்.நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் பிரமுகர் தமிழருவி மணியன், முன்னாள் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், தமிழறிஞர்கள் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற இருக்கிறார்கள்.
அவர்களை சந்தித்து பேசி, அவர்களின் ஒப்புதலை பெற்ற பிறகு இந்த இயக்கத்தின் குழு விரைவில் கூடி ஒரு அறிக்கை தயாரிக்கும். ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை தயாரித்து முதல்வர் கருணாநிதியிடம் கொடுக்க இருக்கிறோம்.
அரசியல் சட்டப்பிரிவு 161ன் கீழ் மாநில அரசுகளுக்கு ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்ய அதிகாரம் உள்ளது. 6 மாத சிறை தண்டனை பெற்றவர்கள் முதல், 20 வருட சிறை தண்டனை பெற்றவர்கள் வரை உள்ளவர்களை விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு இந்த சட்டப்பிரிவின் கீழ் அதிகாரம் உள்ளது. ஆகவே நளினியை விடுதலை செய்ய முடியாது என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி கூறுவது தவறானது.
மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே கூட 16 ஆண்டு சிறைவாசத்திற்கு பின்பு விடுதலை செய்யப்பட்டார். தற்போது நளினி 17 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவரை ஏன் விடுதலை செய்யக்கூடாது.
நீண்ட காலம் சிறையில் இருப்பதால் நளினியின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாலும், விடுதலையாகி விடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.
பிரியங்கா தன்னை சந்தித்து பேசியதற்காக நளினி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால் அதற்கு பிரியங்காவிடமிருந்து பதில் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications