அணு ஒப்பந்தம்: வெளிப்படையாக பிரச்சனைகள் இல்லை - ரைஸ்

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதன் பின்னணியில், கான்டலீசா ரைஸ் நேற்று 2 நாள் பயணமாக டெல்லி வந்தார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அவர் ஹைதராபாத் ஹவுஸில் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பான 123 ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள அணு சக்தி சட்ட மசோதாவில் விரைவில் அதிபர் புஷ் கையெழுத்திட்டு அதை சட்டமாக்குவார் என்று ரைஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பான சில நிர்வாக நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் ரைஸ் தெரிவித்தார். இவை முடிந்தவுடன் 123 ஒப்பந்தத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திடுவர் என்றும் ரைஸ் தெரிவித்தார்.
ரைஸ் தொடர்ந்து பேசுகையில், இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக எந்த வெளிப்படையான பிரச்சனைகளும் இல்லை. விரைவில் அதிபர் புஷ் சட்டத்தில் கையெழுத்திடுவார்.
இரு நாடுகளுக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இருப்பதாக யாரும் நினைத்து விடக் கூடாது என விரும்புகிறோம். இவையெல்லாம் நிர்வாக ரீதியிலான விஷயங்கள்தான். விரைவில் இவை சரியாகி விடும்.
அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள சட்டத்தை வெள்ளை மாளிகைக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அதிபர் கையெழுத்திடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் விரைவில் இது நடக்கும் என்றார் ரைஸ்.
இதற்கிடையே, அதிபர் புஷ், செவ்வாய்க்கிழமையன்று 123 ஒப்பந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது. அதன் பின்னர் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்கா செல்வார். பின்னர் அங்கு வைத்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் என ஒரு தகவல் தெரிவிக்கிறது.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
ஹார்முஸ் நோக்கி வந்த ஈரானிய டிரோன்கள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..மீண்டும் உச்சத்தில் டென்ஷன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications