8 நிமிடங்களில் முடிந்த ரிசர்வேஷன்: பயணிகள் கடும் ஏமாற்றம்
சென்னை: தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய 8 நிமிடங்களில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதால் அதிகாலை முதலே நீண்ட வரிசைகளில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் ஏமாற்றமடைந்தனர்.
வருகிற 27ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், கோவை போன்ற ஊர்களுக்கும் செல்லும் வெளியூர்ப் பயணிகள் 90 நாட்களுக்கு முன்பே ரயில்களில் முன்பதிவு செய்து விட்டனர்.
இதையடுத்து சென்னையிலிருந்து மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி, எர்ணாகுளம் உள்ளிட்ட ஊர்களுக்கு 10 சிறப்பு ரயில்களை அறிவித்தது. இவற்றுக்கான முன்பதிவு இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை 8 நிமிடங்களில் முன்பதிவு தொடங்கியது. வழக்கமான ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள், சிறப்பு ரயில்களிலாவது எடுக்கலாம் என்பதற்காக அதிகாலை முதலே சென்னையில் உள்ள எழும்பூர், மாம்பலம், தாம்பரம் உள்ளிட்ட ரயில்வே முன்பதிவு மையங்களில் காத்திருந்தனர்.
ஆனால் 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய 8 நிமிடங்களிலேயே அனைத்து சீட்களும் நிரம்பி விட்டன. அதன் பின்னர் வந்தவர்களுக்கு காத்திருப்போர் பட்டியலில்தான் இடம் கிடைத்தது.
இதனால் நீண்ட நேரமாக காத்துக்கிடந்த பொதுமக்கள் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
ஆன்லைன் மூலம் டிராவல்ஸ் நிறுவனங்கள் மொத்தமாக டிக்கெட்களை புக் செய்து விடுவதே இதற்கு முக்கிய காரணம் என அவர்கள் குற்றம் சாட்டினர்.
இப்படி புக் செய்து விட்டு பின்னர் அதிக விலைக்கு டிக்கெட்களை பல டிராவல்ஸ் நிறுவனங்கள் விற்பதாகவம் அவர்கள் குமுறல் வெளியிட்டனர். இதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை சிறப்பு ரயில்கள் விட்டாலும் வரிசையில் நின்று யாரும் டிக்கெட் எடுக்கவே முடியாது என்றும் அவர்கள் கோபத்துடன் கூறினர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications