ஜனநாயகன் படத்துக்கு யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? அதிலும் குறைந்த சம்பளம் இந்த நடிகைக்கு தானாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்னும் சில மணி நேரங்களில் உலகம் முழுவதும் தியேட்டரில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். பல மாதங்களாக சர்ச்சைகளிலும், சிக்கல்களிலும் சிக்கி இருந்த இந்த படம் ஒரு வழியாக ரசிகர்களை சந்திக்க இருப்பதால் தமிழக முழுவதும் திருவிழா சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த படத்தில் நடிப்பதற்கு யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

ஜனநாயகன் படம் போன வருஷமே வெளியாக போகிறது என்று கூறப்பட்டது. ஆனால் சென்சார் பிரச்சனைகளால் கடைசி நேரத்தில் வெளியாக முடியாமல் போய்விட்டது. அதற்குப் பிறகு அந்த மாதம் வந்துவிடும்... இந்த மாதம் வந்துவிடும்.. அடுத்த வாரமே வந்து விடும்... என்றெல்லாம் ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு கடைசியில் ஏமாற்றமே கொடுத்து வந்தது. ஒரு வழியாக இப்போ நாளை இந்த படம் வெளியாக இருக்கிறது.

H Vinoth Jana nayagan Vijay

ஜனநாயகம் அப்டேட்

இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டிருப்பதும் தனியாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக விஜய் படம் என்பதால் குடும்பத்துடன் பார்ப்பதற்கு தான் அதிகமான ரசிகர்கள் விரும்புவார்கள். அதிலும் அவருடைய கடைசி படத்தை சொல்லவே வேண்டாம். பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு இந்த படம் உருவாக்கப்பட்டிருப்பதால் குடும்பத்தோடு வரவேண்டும் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான்.

சம்பள விபரங்கள்

ஆனாலும் அதை கூட எல்லோரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வாங்கிய சம்பள விபரங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் வெளியான தகவலின் படி,

நடிகர் விஜய் சுமார் 275 கோடி

பூஜா ஹெக்டே சுமார் 6 கோடி

நடிகர் பிரகாஷ்ராஜ் சுமார் 3 கோடி

நடிகர் பாபி டியோல் சுமார் 5 கோடி

நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன் சுமார் 1.5 கோடி

மமீதா பைஜு சுமார் 75 லட்சம்

இயக்குனர் ஹச் வினோத் சுமார் 15 கோடி

இசையமைப்பாளர் அனிருத் சுமார் 10 கோடி

என்ற தகவல்கள் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. ஆனால் இந்த தொகைகள் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

H Vinoth Jana nayagan Vijay

ஹெச் வினோத் விளக்கம்

ரிலீசுக்கு முன்பே இந்த படத்தை பற்றி பல மாதங்களாக பேசப்பட்டு வந்தாலும் இயக்குனர் ஹெச் வினோத் தொடர்ந்து கொடுத்து வரும் பேட்டிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது. அதேபோல நடிகர் பிரகாஷ்ராஜ் குறித்து அவர் பகிர்ந்த சம்பவமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் மற்றும் பிரகாஷ்ராஜ் இருவரும் இயல்பாக நடந்து கொண்ட விதம் குறித்தும் பேசி இருக்கின்றார்.

டெல்லியில் மாணவர்கள் தடியடி.. ஜனநாயகன் கொண்டாட்டத்தில் தமிழ்நாடு புள்ளிங்கோஸ்.. ப்ளூ சட்டை மாறன் பதிவு
ஜனநாயகன் படத்தின் சூட்டிங் போது தான் பிரகாஷ்ராஜ் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பதால் விமர்சித்து பேசி இருந்தார். அடுத்த நாள் சூட்டிங் வந்த பிரகாஷ்ராஜ் மற்றும் விஜய் இருவரும் என்ன மாதிரி ரியாக்சன் கொடுப்பாங்க என்று நான் ரொம்ப ஆர்வத்தோடு இருந்தேன் ஆனால் அவங்க எதையுமே கண்டுகொள்ளாமல் ரொம்ப நல்ல நண்பர்களாகத்தான் நடந்து கொண்டார்கள். அது பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அரசியல் வேறு, சினிமா வேறு என்று அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் சொல்லியிருந்தார்.

அதேபோல விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற பீலிங்கை இந்த படம் கொடுத்திருப்பதால் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் பல இடங்களில் விட்டு தீர்ந்து விட்டன. தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ரசிகர்கள் ஸ்பெஷல் ஷோக்காக காத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+