Nishanth: தனிஷ்க் நகைக் கடை கொள்ளை ஏன்? காதலி மீனாட்சி விட்ட கண்ணீர்! பதறிய நிஷாந்த்! நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை தனிஷ்க் நகைக் கடையில் நிஷாந்த் கொள்ளையடித்ததே காதலி மீனாட்சி நாச்சியாருக்காகத்தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கொள்ளைக்கு மீனாட்சி தனது ஸ்கூட்டி வாகனத்தையும் கொடுத்தனுப்பியிருந்தாராம்.

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் கடந்த மாதம் 15ஆம் தேதி தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் 12-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஊழியர்கள் கடையைத் திறந்தபோது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகள் சிதறிக் கிடந்ததுடன், பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக மேலாளருக்குத் தகவல் தெரிவித்ததுடன், காவல்துறையினரிடமும் புகார் அளித்தனர்.

Nishanth

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.எஸ். காலனி காவல்துறையினர், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளை நடைபெற்ற பகுதியில் தடயங்களைச் சேகரித்தனர். தொடர்ந்து கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, நவம்பர் 1ஆம் தேதி கையில் கட்டுப் போட்டபடியும், 2ஆம் தேதி தொப்பி அணிந்தபடியும் வாடிக்கையாளரைப் போல இயல்பாக நகைக்கடைக்குள் வந்த இளைஞரின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இந்தக் காட்சிகளையும், 12ஆம் தேதி முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட நபரின் காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இருவரது கைகளிலும் ஒரே மாதிரியான டாட்டூ இருப்பது தெரியவந்தது. இந்த டாட்டூவே கொள்ளையனை அடையாளம் காண்பதற்கான முக்கிய தடயமாக அமைந்தது.

மேலும், நகைக்கடையை ஒட்டிய நேதாஜி மெயின் ரோடு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, முகமூடி, ஹெல்மெட் மற்றும் கையுறை அணிந்தபடி இளைஞர் ஒருவர் பைக்கில் வேகமாகப் Bag-களுடன் சென்ற காட்சிகளும் பதிவாகியிருந்தன. இதன் அடிப்படையில், மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவைச் சேர்ந்த நிஷாந்த் என்ற இளைஞர் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர்ந்து நிஷாந்த் குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய அவர், அவ்வப்போது யூடியூப் சேனல்களுக்கான வீடியோ எடிட்டிங் பணிகளையும் செய்து வந்துள்ளார். மேலும், கேரளா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நண்பர்களுடன் ஜாலி ரைடு செல்வது, சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வருவது என ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.

அப்போது தனது கல்லூரிக் காலத் தோழியும், பிரபல இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சருமான மீனாட்சியைக் காதலித்து வந்துள்ளார். தற்போது மீனாட்சி புதிய வீடு கட்டி வரும் நிலையில், அதற்குப் போதிய பணம் இல்லாமலும், பல்வேறு கடன்கள் இருப்பதாகவும் கூறி காதலன் நிஷாந்திடம் கண்ணீர் விட்டுக் கேட்டதாகத் தெரிகிறது.

இதனால் காதலியின் நிலையைப் பார்த்து கலங்கிய நிஷாந்த், ஹாலிவுட் தொடரான Money Heist பாணியில் நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்கான திட்டத்தைத் தீட்டியுள்ளார். இந்தத் திட்டத்திற்கு மீனாட்சியும் உதவியதுடன், தனது பைக்கையும் கொள்ளைக்குப் பயன்படுத்துவதற்காகக் கொடுத்ததாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+