மதுரை தனிஷ்க்கில் நகை கொள்ளையன் நிஷாந்த் குறித்து போலீஸுக்கு காட்டி கொடுத்த "பறவை- கொம்புள்ள மான்"
மதுரை: மதுரை தனிஷ்க் நகைக் கடையில் கொள்ளையடித்தது யூடியூபர் நிஷாந்த்தான் என்பதை போலீஸார் கண்டுபிடித்தது எப்படி என்பதை பார்க்கலாம். மேலும் இந்த சம்பவத்தில் நிஷாந்தின் தந்தை சிக்கியது எப்படி? என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை காளவாசல் பைபாஸ் சைலையில் உள்ளது தனிஷ்க் நகைக் கடை. இந்த கடையில் கடந்த 12 ஆம் தேி முகமூடி அணிந்த நபர் 21 கிலோ தங்க நகைகளை கொளளையடித்துச் சென்றது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது நகைக் கடையினுள்ளே ஒரே ஒரு நபர் மட்டும் 1 மணி நேரமாக பொறுமையாக தேடி தேடி நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

போலீஸார் தேடுதல் வேட்டை
மேலும் அந்த நபர் கொள்ளையடித்த நகைகளை எல்லாம் தனியொருவனாக ஸ்கூட்டி வாகனத்தில் வைத்து கொண்டு சென்ற காட்சிகளும் வெளியாகின. இதை வைத்து ஏதாவது துப்பு கிடைக்குமா என போலீஸார் தேடி வந்தனர்.
தப்பிய இளைஞர்
இந்த நிலையில் இந்த நகைக் கொள்ளையில் ஈடுபட்டது யூடியூபர் நிஷாந்த் என்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து பழங்காநத்தம் வி.கே.பி. நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர். போலீஸார் வருவதை அறிந்த அந்த இளைஞர் தப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது.
நிஷாந்துக்கு எப்படி தொடர்பு?
இந்த சம்பவத்தில் நிஷாந்திற்கு தொடர்பிருந்தது எப்படி போலீஸார் உறுதிப்படுத்தினர் என்பதை பார்க்கலாம். அதாவது நகைக் கடையில் கொள்ளை நடைபெறுவதற்கு முன்பு கடைக்கு 5 முறை நிஷாந்த் சென்றிருந்தாராம். கடை ஊழியர்களும் அந்த சிசிடிவி காட்சியை காட்டி அவர் மீது சந்தேகமாக இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
கடைக்கு வந்த நிஷாந்த்
நிஷாந்த் அந்த கடைக்கு நகை வாங்குவது போல் வந்து கடை ஊழியர்களிடம் பேச்சு கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. அவரது கையில் இருந்த பறவை, கொம்புள்ள மானின் பெரிய டாட்டூவை நகல் எடுத்து வைத்துதான் நிஷாந்த் என்பதை போலீஸார் அடையாளம் தெரிந்து கொண்டனர்.
சிசிடிவி காட்சிகள்
மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது நிஷாந்த் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு கடையின் நேதாஜி பின்புறம் வழியாக பைக்கில் வேகமாக சென்றார். அவர் சென்ற வழிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அவர் வி.கே.பி.நகர் பகுதியில் நின்றிருந்த ஆட்டோவை தாண்டி இருந்த ஒரு சந்திற்கு சென்றது தெரியவந்தது.
நிஷாந்த் கட்டப்பை
இதுகுறித்து அங்கிருந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது 13 ஆம் தேதி காலை நிஷாந்த் கட்டப்பைகளில் எதையோ எடுத்துக் கொண்டு ஆட்டோவில் சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் அந்த ஆட்டோவும் இரு நாட்களாக வெளியே எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த நபர் மாடக்குளம் அருகே வயகாட்டில், துணிகளை வைத்து எரித்ததாக அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பார்த்ததாக இளைஞர் ஒருவர் சாட்சி சொன்னார். அந்த வழியாக இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அது சுரேஷ் என்பவரது ஆட்டோ என தெரியவந்தது. அவரது மகன்தான் இந்த நிஷாந்த்.
லேப்டாப் பறிமுதல்
இதை வைத்துதான் நிஷாந்த் வீட்டிற்கு போலீஸார் சென்று சோதனை செய்து லேப்டாப் மற்றும் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் துப்பாக்கி உள்ளிட்டவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மீனாட்சி நாச்சியார்
போலீஸார் சோதனையின் போது தனக்கு எதுவும் தெரியாது என்றும் தனது மகன் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருப்பதாகவும் சுரேஷ் தெரிவித்தார். இதையடுத்து சுரேஷிடம் நடத்திய விசாரணையில் இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி நாச்சியாருடன் அவர் அடிக்கடி பேசி வந்ததும் இருவரும் காதலர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி நாச்சியார் வீட்டில் சோதனை செய்த போது அங்கிருந்து 5 கிலோ நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சுரேஷையும் மீனாட்சி நாச்சியாரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.




Click it and Unblock the Notifications
