நடிகர் அர்ஜுன் தாஸ்க்கு என்ன ஆச்சு? கம்பீரமாக இருந்தவருக்கா இந்த நிலைமை? விஷாலுக்கு நடந்த அதே விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அர்ஜுன் தாஸை பார்த்தாலே முதலில் நமக்கு நினைவுக்கு வருவது அவருடைய கம்பீரமான தோற்றமும், அந்தக் கணீர் குரலும்தான். 'கைதி' படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் மிரட்டியதில் இருந்து அவருக்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது. வில்லனாகவும், ஹீரோவாகவும் அடுத்தடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படிப்பட்ட அர்ஜுன் தாஸை இப்போது ஒரு வீடியோவில் பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.

காலில் பெரிய கட்டு போடப்பட்டிருக்க, கையில் ஸ்டிக் பிடித்துக்கொண்டு இன்னொருவரின் உதவியுடன் அவர் மெதுவாக நடந்து வரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாக திரையில் கம்பீரமாகவும், மிடுக்காகவும் நடந்து வரும் அர்ஜுன் தாஸை இப்படி நடக்கவே சிரமப்படுவதை பார்த்த ரசிகர்கள், அவருக்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Arjun Das

வைரலான வீடியோ

கலாட்டா டாட் காம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் அர்ஜுன் தாஸ் காலில் பெரிய அளவில் கட்டு போடப்பட்டிருக்கிறது. ஒரு கையில் ஸ்டிக் வைத்துக்கொண்டு, அருகில் இருக்கும் நபரின் கையையும் பிடித்தபடி படிக்கட்டுகளில் ஏறி மெதுவாக மேலே வருகிறார். அவர் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்பதை பார்க்க முடிகிறது. இந்த காட்சி அவருடைய ரசிகர்களை கவலையடைய வைத்திருக்கிறது. படத்தின் புரமோஷனுக்கு வர வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட நிலையிலும் அவர் வந்திருக்கிறாரா என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அதே நேரத்தில் அவருக்கு காலில் என்ன பிரச்சனை, எப்போது காயம் ஏற்பட்டது என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

விஷாலுக்கு நடந்தது போல

இதற்கு முன்பு நடிகர் விஷால் 'மத கஜ ராஜா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கலந்து கொண்டது பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போது அவருடைய கைகள் நடுங்கியதுடன், மேடையில் நிற்க முடியாமல் நின்று கொண்டு இருந்தார். அவருக்கு அந்த சமயத்தில் கடுமையான வைரஸ் காய்ச்சல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் விஷாலின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தனர். பின்னர் விஷாலும் தனது உடல்நிலை குறித்து விளக்கம் அளித்திருந்தார்.

இப்போது அதேபோன்ற ஒரு சூழலில் அர்ஜுன் தாஸின் வீடியோவும் வெளியாகியிருப்பதால் ரசிகர்கள் அந்த சம்பவத்தை நினைவுபடுத்தி வருகின்றனர். ஆனால் விஷாலுக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்சனையும், அர்ஜுன் தாஸின் தற்போதைய நிலையும் ஒன்றல்ல. அர்ஜுனுக்கு என்ன நடந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகாத நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அர்ஜுன் தாஸ் நடிப்பில் ஜான் டோ

இன்னொரு பக்கம், அர்ஜுன் தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜான் டோ' திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தில் இருக்கிறது. இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ள இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். சந்துரு என்ற அந்த கேரக்டரில் அவர் நடித்துள்ளார். சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக தான் இவர் இப்படி வந்திருக்கிறார். அதனால் இவருக்கு உண்மையில் உடல்நிலை சரியில்லையா? அல்லது ப்ரோமோஷன்காக இப்படி வந்தாரா? என்ற கேள்வியும் பலருக்கும் இருக்கிறது. இது பற்றி அவரிடம் விசாரிக்க நாம் முயற்சி செய்திருக்கிறோம். அதற்கான விளக்கம் இன்னும் கிடைக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+