திருப்பதி கருட சேவை - 7 லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருமலை: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று நடந்த கருட சேவையை 7 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயமடைந்தனர். இவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
திருப்பதி அருள்மிகு வெங்கடாசலபதி கோவிலில் கடந்த முதல் தேதி பிரம்மோற்சவம் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை நேற்று நடந்தது.
கருட சேவை தரிசனம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதாலும், உற்சவர் மலையப்ப ஸ்வாமி மகாவிஷ்ணு அவதாரத்தில் தோன்றி லட்சுமி, சகஸ்ர நாமாவளி மற்றும் மகரகண்டி ஹாரங்கள் அணிந்து வருவதை தரிசனம் செய்தால் பீடை விலகி, செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
பிரம்மோற்சவம் தொடங்கிய முதல் நாளில் இருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவியத் தொடங்கினர். முக்கியமான திருவிழாவான கருட சேவை நேற்று நடந்தது. இதை தரிசிக்க திருமலையில் 7 லட்சம் பக்தர்கள் குவிந்தனர். ஸ்வாமி திருவுலாவுக்கு முன்னரே பக்தர்கள் கோவிலைய சுற்றி குழுமி இருந்தனர்.
கருட வாகனத்தில் மலையப்பர் அருள்பாலித்தார். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று திருநாமம் கூறி தரிசனம் செய்தனர். பெருமபாலும் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இதில் 50 சதவீதம் பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தரிசனத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொழி புரியாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் பக்தர்களுக்கும் பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த 5 நாட்களில் மட்டும் திருமலை கோவிலில் ஸ்ரீவாரி உண்டியலில் ரூ.8 கோடியும், தங்கம், வெள்ளி காணிக்கை மூலம் ரூ.2 கோடியும் மொத்தம் ரூ.10 கோடி வசூலாகியுள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications