பிரதமர் பதவிக்கு மாயாவதி தகுதியானவர்: உமாபாரதி
டெல்லி: அத்வானியை விட உத்தர பிரதேச முதல்வர் மாயாவதிதான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று பாரதிய ஜன சக்தி கட்சியின் தலைவர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக தனது பிரதமர் வேட்பாளராக அத்வானியை அறிவித்துள்ளது. காங்கிரஸ் மன்மோகன் சிங்கே மீண்டும் பிரதமர் ஆவார் என்று கூறுகிறது. இடதுசாரிகள் மாயாவதியை முன்னிருத்த உள்ளன.
இந்நிலையில் உமாபாரதி மாயாவதிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜக தலைவர் அத்வானியை விட பிரதமர் பதவிக்கு மாயாவதிதான் தகுதியானவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரதமராக வருவதை வரவேற்பேன். மகிழ்ச்சி அடைவேன்.
ஆனால் அது மிகுந்த கஷ்டம். பிரதமர் பதவிக்கு வரவேண்டும் எனறால் மாயாவதி கட்சிக்கு குறைந்தது 70 எம்பிக்களாவது தேவை.
மத்திய பிரதேசத்தில் எனது கட்சியான பாரதிய ஜன சக்தியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து காங்கிரஸின் வாக்குகளை சிதைத்துள்ளன. சில பகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியும் சில பகுதிகளின் பாரதிய ஜன சக்தி கட்சியும் வலுவாக உள்ளன.
உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை பிடித்த போதிலும், இதே அளவுக்கு வலுவான கட்சியாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் இருக்க முடியாது.
உ.பி.யில் அதிகரித்த வன்முறை காரணமான சமாஜ்வாதி மற்றும் பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். மத்திய பிரதேசத்தில் ஊழல் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. இதில் மாயாவதி ஒன்றும் விதிவிலக்கல்ல.
மீண்டும் பாஜகவுக்கு திரும்பும் உத்தேசம் இல்லை. முஸ்லீம்களுக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சியுடன் உடன்பாடு செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை.
குறுகிய கால அரசியல் ஆதாயத்துக்காக ஒருபோதும் நாட்டை அடகு வைக்க மாட்டேன். இந்த கொள்கையை என்னிடம் இருந்து அத்வானி அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரே கருத்துள்ள இரண்டு கட்சிகள் சேர்ந்தால் அது காங்கிரஸூக்கு இழப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications