புகைக்கு தடை: பீடி தொழிலாளர்களுக்கு நிவாரணம் - சரத்
சென்னை: பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில், மத்திய அரசு பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்து சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கதே.
வெளிநாடுகளிலும், பொதுநலன் கருதி இத்தகைய சட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இத்தகைய சட்டங்கள் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தும்போது இந்த சட்டத்தின் சாதகங்களை ஆராய வேண்டும். அதேவேளை, அதனால் ஏற்படும் பாதகங்களுக்கும் தீர்வு கண்ட பின்னரே அந்த சட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதேபோல் நம்நாட்டிலும் அரசு இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே, இந்த சட்டத்தால் ஏற்படும் பாதகங்களுக்கு தீர்வு ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும்.
நம் நாட்டில், பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்து சட்டம் கொண்டு வரப்பட்டு புகைபிடிப்போரின் எண்ணிக்கை குறைவதால், ஏழைகளின் சிகரெட் எனப்படும் பீடி உற்பத்தியை நம்பி லட்சக்கணக்கான பீடி சுற்றும் தொழிலாளர்கள் அவர்களுள் பெரும்பாலோர் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற உண்மை தெரியவரும்.
நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் மட்டும் சுமார் 7 லட்சம் பேர் இந்த சட்டத்தால் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கெனவே பீடி உற்பத்தித் தொழில் நலிவடைந்து பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில், இந்த சட்டம் மேலும் அவர்களுக்கு பாதிப்பை உருவக்கியுள்ளது.
எனவே இந்த சட்டத்தின் மூலம் பாதிப்படைந்துள்ள பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடாக, பீடி சுற்றும் தொழிலாளர்களாக பதிவு செய்திருப்பவர்களுக்கு மாற்றுத் தொழில் கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும், அதுவரைக்கும் அவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக அவர்களது வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில், உதவித்தொகை வழங்கவும் அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications