பவானி ஆற்றில் தடுப்பணை கட்ட கேரளா திடீர் மும்முரம்
கோவை: பவானி ஆற்றின் குறுக்கே ஐந்து இடங்களில் தடுப்பணைகள் கட்ட கேரளா திடீர் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் கோவை, ஈரோடு மாவட்ட குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் உற்பத்தியாகி, அமைதிப் பள்ளத்தாக்கு வழியே, கேரளாவில் பாய்ந்து, அத்திக்கடவு வழியாக சேலம் மாவட்டத்திற்குள் ஓடுகிறது பவானி ஆறு.
இதில் கேரளாவுக்குள் ஓடும் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்ட கேரள அரசு கடந்த 2001ம் ஆண்டு முயற்சித்தது. அப்போது இருந்த அதிமுக அரசு இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றது.
இதையடுத்து வாலை சுருட்டிக் கொண்டிருந்த கேரளா தற்போது மீண்டும் தடுப்பணை கட்டும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே ஐந்து இடங்களில் தடுப்பணைகளை கட்ட ரூ. 4 கோடி நிதியை கேரள அரசு ஒதுக்கியுள்ளது.
சமீபத்தில் அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து தற்போது முதல் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.
கேரளாவின் இந்தத் தடுப்பணை திட்டத்தால், கோவை, ஈரோடு மாவட்ட குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீராதாரம் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், அத்திக்கடவு - குன்னூர் -பில்லூர் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் பெரும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications