அமைச்சர் மைதீன்கான் பேனர் மீது தார் பூசி அழிப்பு
நெல்லை: பாளையங்கோட்டையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் போடப்பட்டிருந்த அமைச்சர் மைதீன்கான் படம் மீது மர்ம நபர்கள் சிலர் தார் பூசி அழித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தசரா விழாவையொட்டி பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயில் அருகே திமுக சார்பில் பக்தர்களை வரவேற்று டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. பேனரின் மேல்பகுதியில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலின் ஆகியோரது படங்களும் கீழ் பகுதியில் அமைச்சர் மைதீகான், எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் ஆகியோரது முழு உருவ படங்களும் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இரவில், பேனரில் இருந்த டிபிஎம் மைதீன்கான் படத்தின் மீது தார்பூசி அழித்துள்ளனர். காலையில் இதை பார்த்த திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பேனரை அங்கிருந்து அகற்றி எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து பாளை போலீசில் புகார் செய்யப்பட்டது. பாளையில் நடந்த திக மாநாட்டில் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications