தேமுதிகவுடன் கூட்டணி வைக்க ஆட்சேபனையில்லை: அன்புமணி
சென்னை: திமுக, அதிமுக தவிர்த்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைக்க விரும்புகிறோம். அந்த கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக சேருவதில் ஆட்சேபனை ஏதுமில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக அல்லாத கட்சிகளை காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைப்பதையே பாமக விரும்புகிறது. அந்தக் கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக சேருவதில் ஆட்சேபனை இல்லை. அப்படி உருவாகும் கூட்டணி வலுவுள்ளதாக இருக்கும்.
கூட்டணி என்பது தேர்தலுக்கான ஒரு உடன்பாடுதான் என்பதால் அதில் சிக்கல் இருக்காது. காங்கிரஸ், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் சேர்ந்தால் அது வலுவான கூட்டணியாக உருவாகும். வேறு சில சிறிய கட்சிகளும் அதில் சேரும்போது வெற்றிக் கூட்டணியாக அது அமையும்.
நாங்கள் காங்கிரசுடன் இருக்கிறோம், கூட்டணி விஷயத்தில் காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொருத்து எங்களது முடிவு அமையும். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் இருப்பதால் மத்திய அரசில் தொடருவதில் எந்த சிக்கலும் இல்லை.
தமிழ்நாட்டில் அரசுக்கு எதிரான உணர்வு மக்களிடையே வலுவாக உள்ளது. திமுகவுடன் உறவை துண்டித்துக் கொள்ள காங்கிரசுக்கு போதிய காரணங்கள் உள்ளன. அரசுக்கு எதிரான நிலை நிலவுவதால் திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். மக்களை பொருத்தவரை திமுக, அதிமுக இடையே வேறுபாட்டை அவர்கள் காணவில்லை.
திமுகவுடன் மீண்டும் கூட்டணி கஷ்டம்:
காரணமில்லாமல் பாமகவை திமுக வெளியில் அனுப்பியது. அந்த கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைத்துக் கொள்வது மிகவும் கடினம்.
கூட்டணி விஷயத்தில் திமுகவுடன் சமரசம் செய்து கொள்வது மிகவும் கடினம் என்றார்.
அதிமுகவுடன் கூட்டணி பற்றிய கேள்விக்கு பதில் அளிக்காத அவர் தேமுதிகவுடன் கூட்டணி பற்றி கேள்விக்கு அரசியலில் நிரந்தர எதிரி இல்லை என்றார்.
தேமுதிகவுடன் கூட்டணி வைக்க பாமகவுக்கு ஆட்சேபனையில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications