பிரபாகரன் உருவில் பகத்சிங்கை காண்கிறேன்: வைகோ
சென்னை: மாவீரன் பக்திசிங்கின் வீரத்தை வன்னிக்காட்டில் பார்க்கிறேன். பகத்சிங்கை பிரபாகரனின் வடிவத்தில் பார்க்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
பகத்சிங் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மதிமுக தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் எழுதிய கனவாகிப்போன கச்சத்தீவு நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நூலை வைகோ வெளியிட நல்லக்கண்ணு பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில், மாவீரன் பக்திசிங்கின் வீரத்தை வன்னிக்காட்டில் பார்க்கிறேன். பகத்சிங்கை தம்பி பிரபாகரனின் வடிவத்தில் பார்க்கிறேன். தமிழினத்தை மீட்க விடுதலை புலிகள் போர்க்களத்தில் நிற்கிறார்கள். அவர்களின் ஆயுத போராட்டம் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.
இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதை வைத்து அங்குள்ள தமிழர்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இலங்கையில் நடந்து வரும் யுத்தத்தை இந்திய அரசுதான் பின் நின்று நடத்துகிறது என்று குற்றம் சுமத்துகிறேன். இப்படி பேசுவது, தேசதுரோகம் என்றால் இந்த தேசதுரோகத்தை வைகோ தொடர்ந்து செய்வான். இலங்கை ராணுவம் தமிழர்களை கொன்று குவிப்பது மற்றும் தேசபக்தியா
இந்திய அரசு, ராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தியாவும் இலங்கையும் தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்திருப்பது இன்னும் வெளிவராத செய்தி. இந்த ஒப்பந்தம் 2013ம் ஆண்டு வரை அமலில் இருக்கப்போகிறது.
தமிழர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதை கண்டித்தும், இலங்கை தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை மத்திய அரசு தடுக்கக் கோரியும் வரும் 10ம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு திரண்டு மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications