ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் தற்கொலை: ரசிகர்கள் மிரட்டல்!

Subscribe to Oneindia Tamil

Rajini
தேனி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் கூண்டோடு தற்கொலை செய்து கொள்வோம் என தேனி மாவட்ட ரஜினி ரசிகர்கள் மிரட்டியுள்ளனர்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மாநிலம் முழுவதும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உச்சகட்டமாக கோவையில் புதுக் கட்சி ஒன்றையும் அவரது ரசிகர்கள் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், தேனி மாவட்ட ரசிகர்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளனர்.

தேனி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற கூட்டம் தலைவர் ஜெய் புஷ்பராஜ் தலைமையில் தேனியில் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரஜினி உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தேனி மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் கூண்டோடு தற்கொலை செய்து கொள்வோம்.

ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து சுயமாக, விரைவாக முடிவெடுகக் வேண்டும். அதுவரை வேறு எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை.

உடனடியாக மாநில அளவில் ரசிகர் மன்ற மாநாட்டை நடத்திட வேண்டும்.

மன்றத்தினரின் குடும்ப விழாக்களில் ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணன் பங்கேற்க வேண்டும் என்று அந்த தீர்மானங்கள் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+