இந்தியத் தொழில் வளர்ச்சி 1.3 சதவிகிதமாக சரிவு!
டெல்லி: சர்வதேச பொருளாதார நெருக்கடி நாட்டின் சகல மட்டத்திலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தொழில்துறையின் மாதாந்திர வளர்ச்சி கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொழில் வளர்ச்சி 10.9 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்டில் இது அப்படியே தலை கீழாகி 1.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது!
உற்பத்தி சார்ந்த தொழில்களின் வளர்ச்சி பல்வேறு காரணங்களால் 10.7 சதவிகிதத்திலிருந்து 1.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
உள்கட்டமைப்புத் துறையிலும் இதே நிலைதான். கடந்த ஆண்டு ஆகஸ்டில் இத்துறையின் வளர்ச்சி 9.5 சதவிதமாக இருந்த்து. அதுவே இந்த ஆண்டு ஆகஸ்டில் 2.3 சதவிகிதமாக உள்ளது.
கடந்த ஏப்ரல் தொடங்கி ஆகஸ்ட் வரையிலான 5 மாத காலத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி 10 சதவிகிதத்திலிருந்து 4.9 சதவிகிதமாக்க் குறைந்துள்ளது.
இந்த ஆண்டு தொழில் வளர்ச்சி இலக்கு 10 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது. பொருளாதர வளர்ச்சி 8 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது.
இதே நிலை தொடர்ந்தால் ஆண்டு இறுதிக்குள் இந்த இலக்குகளில் பாதியளவைக் கூட எட்டிப் பிடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications