இலங்கை போர்: 47 புலிகள், 3 வீரர்கள் பலி
கொழும்பு: இலங்கையின் வடக்குப் பகுதியில் நடந்து வரும் போரில் ராணுவம் புலிகளின் நிலைகள் மீது பயங்கர தாக்குதலை நடத்தியது. இதில் 47 புலிகள் கொல்லப்பட்டனர். ராணுவத் தரப்பில் 3 வீரர்கள் பலியாயினர்.
விடுதலை புலிகளின் அரசியல் தலைமையகமான கிளிநொச்சியை கைப்பற்ற ராணுவம் கடும தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். தரைப்படை மற்றும் வான்வழித் தாக்குதலை ராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது.
உச்சகட்ட போர் நடந்து வரும் நிலையில்,விமானப்படை நேற்று பயங்கர வான்வழித் தாக்குதலை நடத்தியது. கிளிநொச்சியில் உள்ள புலிகளின் முக்கிய முகாம்களை குண்டு வீசி தாக்கியது.
பரந்தன் பகுதிக்கு வடகிழக்கில் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புலிகளின் தொலைதொடர்பு மையம் முதலில் குறிவைத்து தாக்கப்பட்டது. புலிகளின் மறைவிடங்கள், தற்கொலைப்படையினர் பதுங்கியிருக்கும் குகைகள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.
தரைப்படை தாக்குதலில் அக்கரையன்குளம், மண்குளம், வன்னேரிக்குளம் பகுதிகளில் நடந்த தாக்குதலில் 47 புலிகள் கொல்லப்பட்டனர். புலிகளின் கொரில்லா தாக்குதலை ராணுவம் முறியடித்தது என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications