3 நாட்களாக 150 அடி குழியில் தவித்த சிறுவன் பிணமாக மீட்பு

Subscribe to Oneindia Tamil

ஆக்ரா: 150 அடி ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்த இரண்டு வயது சிறுவன் சோனு நான்கு நாட்களுக்கு பிறகு இன்று காலை பிணமாக மீட்கப்பட்டான். இதை பார்த்த குழந்தையின் தாய் கதறி துடித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் 150 அடி ஆழம் கொண்ட ஆழ்குழாய் கிணறுக்குள் சோனு என்ற இரண்டு வயது சிறுவன் கடந்த நான்கு தினங்களுக்கு முன் விழுந்தான்.

அந்த சிறுவனை உயிருடன் மீட்பதற்காக கடந்த 3 நாட்களாக தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிறுவன் தவறி விழுந்த ஆழ்குழாய் கிணற்றுக்கு அருகில் புதிதாக குழி தோண்டி அதன் வழியாக இணைப்பை ஏற்படுத்தி மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முயற்சியில் ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும் அந்த பகுதியில் பள்ளம் தோண்டும் போது தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வந்ததால் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மீட்புக்குழுவினர் இன்று காலை சிறுவன் சோனுவை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

உடனடியாக சோனு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால், அவன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை கேட்ட குழந்தையின் தாய் கதறித் துடித்தார். மீட்புக் குழுவினரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டு சோனு இறந்திருக்க கூடும். எனினும் பிரேத பரிசோதனைக்குப் பிறகே காரணம் தெரிய வரும் என்றும் டாக்டர்கள் கூறினர்.

நான்கு நாட்களாக 150 அடி ஆழத்தில் உயிருக்காக போராடிய சிறுவன் சோனு இறந்த சம்பவம் ஆக்ராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+