1405 கைதிகள் விடுதலைக்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் 1405 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த செப்டம்பர் 15ம் தேதி இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மறுவிசாரணை நடைபெறும் அக்டோபர் 30-ஆம் தேதி வரை தமிழக அரசின் விடுதலை நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ராஜாராமன், சதீஷ், கிருஷ்ணராஜ், செந்தில்குமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், கடந்த ஆண்டு ஆந்திரா மாநில அரசு சுதந்திர தினத்தை முன்னிட்டு 1500 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதில் இறுதி தீர்ப்பு வழங்கும் வரை, தமிழகத்தில் 1405 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பி.சதாசிவம், ஜே.எம்.பாஞ்சால் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, வழக்கு விசாரணையை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டனர்.
இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பி.சதாசிவம், ஜே.எம்.பாஞ்சால் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கைதிகள் விடுதலை எதிர்ப்புக்கு போதுமான தகவல்கள் தரப்படவில்லை என்று கூறி வழக்கறிஞர்களின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications